நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை
என் வானம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை
சொப்பனம் கண்டபின் கண்ணை காணோம்
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணோம்
கற்பனை செய்தபின் காண நீ இல்லையே
உலக பூமியில் மேகம் ஆனாய்
கற்கண்டு மாமழை தந்து போனாய்
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே
நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை
திங்கள் செவ்வாய் என்றே நகரும்
எந்நாள் என்று இன்பம் நுகரும்
நான் கண்டேன் என் மரணம்
நஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்
ஓ எங்கே என் அமுதம்
திரை சிலைகள் இல்லாத என் ஜன்னல் ஊடாக தேடினேன்
வெளி ஓசைகள் இல்லாமல் வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்
என்னை உன் உள்ளங்கை மீது நீ தாங்கி தாலாட்ட ஆடினேன்
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்
நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை
விண்ணை விட்டு செல்லும் நிலவே
பெண்ணை கண்டு நின்றால் நலமே
ஓ இங்கே நான் தனியே
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே
நீ சொன்னால் சோ்ந்திடுவேன்
கடை கண்ணால நீ பாா்த்த பாா்வைகள் போதாமல் ஏங்கினேன்
சிறு ஓசைகள் கேட்டாலே நீ தானோ என்றே நான் தேங்கினேன்
வெறும் பிம்பத்தை நீ என்று கை நீட்டி ஏமாந்து போகிறேன்
கள்ளமில்லா வெள்ளை நிலா நீதானடி
நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை
என் வானம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை
No comments:
Post a Comment