டியூன் - பாகம் ஒன்று - இந்த படத்தில் பொதுவாக சயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்களின் படங்களை விரும்பி பார்க்கும் மக்களுடைய ரசனைக்கு தீனி போடும் அளவுக்கு பக்காவான அதிகாரப்போட்டி நிறைந்த யுனிவெர்ஸ் கொடுத்துஇருக்கிறார்கள். இந்த காலங்களில் சூப்பர் ஹீரோ படங்களில் இருந்து சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை தனித்து காட்ட வேண்டும் இதனால் நிறைய விஷயங்கள் நன்றாகவே படத்தில் பண்ணி இருக்கிறார்கள். சிறப்பான கிராபிக்ஸ் வொர்க்ஸ் இந்த படத்தின் காட்சிகளில் கொடுத்துள்ளார்கள். குறிப்பாக சைன்ஸ் ஃபிக்ஷன் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படம் முழுக்க முழுக்க இண்டரெஸ்ட்டிங்காக இருப்தை உங்களால் கவனிக்க முடியும்.
படத்திலே கதை நன்றாக இருக்கிறது ஒரு இளவரசன் உள்நாட்டு சதியால் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தாலும் பின் நாட்களில் இழந்ததை மீட்க போராட்டத்தை செய்ய தயாராக இருப்பதுதான் இந்த படத்தின் கதை. அடுத்த பாகத்தில்தான் நெக்ஸ்ட் என்ன நடக்கும் என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். பின்னாட்களில் அவன் கஷ்டப்படுவான் என்பதால் வாழ்க்கை இப்போதே அவனை தயார்படுத்திக் கொள்வதை இந்த படம் காட்டுகிறது. படத்திலே பாலை வன காட்சிகள் கலர் டோன் மற்றும் லொகேஷன்கள் என்று நிறைய காட்சிகளை டிசைன் செய்துள்ள கலை நயம் பார்க்கும்போது இந்த படத்துக்கு VFX பண்ணி அதிகமான விஷயங்களை மெனக்கெட்டு செய்துள்ளதால் இந்த படத்தில் சின்ன சின்ன டீடைல்களையும் மிகவும் சரியாக கொடுத்திருக்கிறார்கள்
மற்றபடி படத்தைபற்றி பார்த்தால் ஒரு ஜெனரல் ஆடியன்ஸ் என்ற வகையில் இந்த படத்தை பார்க்கும்போது கவனமாக முதலில் இருந்து கடைசி வரைக்கும் விடாமல் பார்த்துக் கொண்டே இருந்தால் தான் இந்த படம் புரியும். இந்த படத்தை விட்டு விட்டு பார்த்தால் கண்டிப்பாக யாருக்குமே புரிய வாய்ப்பே இல்லை மேலும் சலிப்பு தட்டவும் வாய்ப்பு உள்ளது மற்ற விமர்சனங்களில் இருந்து சொல்லும்போது மியூசிக் இந்த படத்துக்கு மிகவும் சிறப்பான பக்கபலமாக இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது. படத்துடைய தயாரிப்பு மதிப்பு மற்றும் கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்தல் என்ற வகையில் எல்லோருமே மெச்சூரிட்டியான நடிகர்களாக இருப்பதால் இந்த படத்தின் கதையை நன்றாகவே எக்ஸ்கியூட் செய்துள்ளார்கள். இந்த படத்தை அடுத்த பாகத்தை பார்த்தவுடன் இந்த படத்தின் அடுத்த பக்கத்துக்கான விமர்சனத்தை செய்கிறேன் ஏனென்றால் முழுமையான கதையை பார்த்தால் தான் எப்பொழுதுமே விமர்சனங்கள் மிகவும் சரியாக இருக்கும்.
No comments:
Post a Comment