Wednesday, April 17, 2024

TAMIL TALKS - EP. 93 - பொதுவாக தண்ணி காட்டுவது என்றால் என்ன ?




இந்த கதையை படித்து பாருங்கள் ! ஒரு குளிர் நிறைந்த நள்ளிரவு நேரம். நடுக்கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு பேய் படகில் வந்து குதித்தது. சற்றும் எதிர்பாராத அந்த மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது. " உங்கள் மூன்று பேர்களையும் நான் சாப்பிட போகிறேன்" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் இவர்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒரு நிபந்தனை விதித்தது. " உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் மூவருக்குமே நான் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனையை கொடுக்கிறேன். நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்." என்றது. இந்த சோதனைக்கு மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர். முதலாவது நபர் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் தூரமாக வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது. இரண்டாவது நபர் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் இன்னும் தூரமாக வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது. பேய் சிரித்தது. " இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய். ?" உடனே மூன்றாவது நபர் தன்னிடம் இருந்த, குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு " இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான். பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது. இந்த விஷயத்துக்கு பெயர்தான் தண்ணி காட்டுவது என்று சொல்லப்படுகிறது. நிறைய நேரங்களில் நம்மை விட வலிமையான மனிதர்களை கூட சாமர்த்தியத்தால் செயல்பாட்டால் மடக்க வேண்டும். அப்படி மடக்கினால் மட்டும்தான் நம்மால் வெற்றி அடைய முடியும். குறிப்பாக இந்த கதையில் இருப்பது போல பேய்க்கே தண்ணி காட்டுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்! வாழ்க்கையில் எதிர்ப்பு என்று வந்துவிட்டால் பாவ புண்ணியங்களை பார்க்க கூடாது. நல்ல மனிதன் கண்டிப்பாக நியாயமற்ற காரணத்துக்காக எதிர்க்க மாட்டான். மற்றபடி எதிர்ப்பவர்களை சமாளிக்க இதுபோன்ற சாமர்த்தியம் நிறைந்த செயல்பாடு வாழ்க்கையில் யாராக இருந்தாலுமே அவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இரண்டு பேர் மீன்பிடிக்கச் சென்றனர். ஒருவர் அனுபவம் வாய்ந்த மீனவர், மற்றவர் அவ்வளவு அனுபவம் இல்லாத நபர். அனுபவம் வாய்ந்த மீனவர் ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய மீனைப் பிடிக்கும்போது, அதை புதியதாக வைத்திருக்க அதை தனது பனிக்கட்டியில் வைத்தார். அனுபவம் இல்லாத மீனவன் ஒரு பெரிய மீனைப் பிடிக்கும் போதெல்லாம், அவன் அதைத் திரும்ப எறிந்தான். அனுபவம் வாய்ந்த மீனவர் நாள் முழுவதும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார், கடைசியில் அந்த மனிதன் நல்ல மீன்களை வீணாக்குவதைக் கண்டு சோர்வடைந்தார். ”நீங்கள் பிடிக்கும் அனைத்து பெரிய மீன்களையும் ஏன் திருப்பி வீசுகிறீர்கள்?" அவர் கேட்டார். அனுபவம் இல்லாத மீனவர், "என்னிடம் ஒரு சிறிய பக்கெட் மட்டுமே உள்ளது" என்று பதிலளித்தார். சில சமயங்களில், அந்த மீனவரைப் போல, பெரிய திட்டங்கள், பெரிய கனவுகள், பெரிய வேலைகள், பெரிய வாய்ப்புகள் ஆகியவற்றைத் தூக்கி எறிந்து விடுகிறோம். ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தெரியும், அவனுடைய திறமைக்கு ஏற்றவாறு நீங்கள் மீன்களை துண்டுகளாக வெட்டலாம். அவற்றை இப்படியும் சேகரிக்கலாம். சாமர்த்தியத்தை கண்டிப்பாக இவ்வளவு வெகுளியாக இருப்பவர்கள் கற்றுக்கொள்வது கடினம்தான். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...