ருங்காலத்தில் இரவு பகலாக வேலை பார்த்த ஒரு குழு எப்படியோ கஷ்டப்பட்டு காலத்தை கடந்து செல்லும் டைம் மெஷினை உருவாக்கி விடுகிறார்கள். ஆனால் அந்த மெஷினால் யாருக்கு பலன் இருக்கிறதோ இல்லையோ நிஜமாக பலன் யாருக்கு என்று கேட்டால் தன்னுடைய கல்யாண நாளை மாற்ற நினைக்கும் நம்முடைய கதாநாயகனுக்கு தான். கதாநாயகன் அந்த மிஷினை பயன்படுத்தி அவருடைய கல்யாண வாழ்க்கையை அப்படியே மாற்ற முயற்சி பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் வெற்றிகரமாக அவருடைய கல்யாண வாழ்க்கையை நடக்காமல் செய்வது போல சம்பவங்களையும் அமைத்துவிடுகிறார். இப்போது காலத்தின் விதிகளை மீறி அவருடைய கல்யாண வாழ்க்கையை மாற்றுவதால் பின்னாட்களில் என்னென்ன பிரச்சனைகளை கதாநாயகர் சந்திக்கிறார். தனிப்படை அமைத்து டைம் மெஷின்னை தேடிக்கொண்டு இருக்கும் சைண்டிஸ்ட்களுக்கு நடுவே மறுபடியும் டைம் மெஷின் பயன்படுத்தி எப்படி இந்த பிரச்சினைகளை எல்லாம் மொத்தமாக சமாளித்து வெளியே வருகிறார் என்பதை வேகமாக நகரும் திரைக்கதையை பயன்படுத்தி இந்த படத்தில் நல்ல கலகலப்பாகவே சொல்லியுள்ளார்கள். இந்த படத்தில் டைம் டிராவல் காட்சிகள் மிகவும் கலகலப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் ஒரு சயின்டிஃபிக்ஷன் படமாக இருந்தாலும் சோசியல் ஆக நிறைய மெசேஜ்களை மக்களுக்கு கொடுத்து இருக்கின்றார்கள் . மேலும் இந்த காலத்தில் போதுமான விபரம் இல்லாமல் கலாச்சாரங்களை மறந்து இளைஞர்கள் எப்படி எல்லாம் கெட்டுப் போகிறார்கள் என்பதையும் இந்த காலத்தில் என்னென்ன விஷயங்கள் தவறாக பயன்படுத்தப்படட்டு நம்முடைய சமூகத்துக்கும் கலாச்சாரத்திற்கும் இடைஞ்சல் என்று இருக்கிறது என்பதையும் தெளிவான நறுக்கென்ற விமர்சனங்களாக படத்தின் காட்சிகளில் வைத்து இருக்கின்றார்கள். கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஸாங்க்ஸ் மற்றும் பின்னணி இசை அருமை. VFX மிகவும் சரியாக பயன்படுத்தபட்டு உள்ளது. கொஞ்சம் கூட பேக் டூ தி ஃப்யூச்சர் இன்ஸ்பிரேஷன் எல்லாம் இல்லை. இது ஒரு புதுமையான டைம் மெஷின் திரைப்படம்.
No comments:
Post a Comment