Tuesday, April 2, 2024

TAMIL TALKS - EP.68 - வலைப்பூ முன்னேற்ற சங்கம் !



நம்ம வாழ்க்கையின் மிக மோசமான விஷயம் தவறான முடிவுகளை எடுப்பதுதான். நம்ம வாழ்க்கையில் எப்போதுமே சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றோம். சரியான முடிவுகள் இலாபத்தை கொடுத்து நாளைக்கு ஒரு நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்ன என்ன விஷயங்கள் தேவைப்படுகிறதோ அவைகள் எல்லாவற்றையுமே நமக்காக கொடுத்துவிடும். ஒரு ஊரில் ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள் , மேலானோர் குடும்பத்தில் இருப்பவர்களை எளியோர் திட்டினால் அந்த மேலானோர் பொறுத்துக்கொள்ள வேண்டும். அப்படி பொறுக்காமல் எதுக்கு திட்டுகிறாய் என்று கேள்வியை கேட்டு கோபப்பட்டு திட்டினால் மான நஷ்டம் என்று வழக்கு தொடுத்து எளியோர் அந்த மேலானோரிடம் இருந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்களை அபராதமாக வாங்கி சந்தோஷமாக இருக்கலாம். இந்த சட்டம் வந்ததில் இருந்து எளியோர் ஒரு நாள் இரவுக்குள்ளே இலட்சாதிபதியாக மாறிவிடுகிறார்கள். இது மிகவும் தவறான செயல்முறை என்று நடப்பில் சாத்தியப்படுத்திய காரணத்தால் மட்டும்தான் எல்லோருக்குமே புரிந்தது. இன்றைய தேதிக்கு பணம்தான் எல்லாமே. பணம் இல்லாதவன் குப்பை தொட்டியில் உள்ளே கிடைக்கும் பேப்பர் கிளாஸ்க்கு சமமான வாழ்க்கையை வாழ்கிறான். அவனை யாருமே கண்டுகொள்வதே இல்லை. நெருங்கிய நட்பும் சொந்தமும் என்றாலும் பணம் மட்டும் நம்மிடம் இல்லை என்றால் அப்படியே பின்னாடி காலை வைத்து பின்னுக்கு சென்று விடுகிறார்கள். பணத்தை சம்பாதிப்பது கடினமானது. அந்த பணத்தை ஒரு விதையாக பயன்படுத்தி மரங்களின் தோட்டத்தையும் பின்னாட்களில் மிகப்பெரிய காடுகளையும் உருவாக்குவது மிக மிக கடினமான ஒரு பிராசஸ் என்றே சொல்ல வேண்டியது இருக்கின்றது. இந்த வலைப்பூ இத்தனை வருடங்களாக எதிர்பார்த்த அளவுக்கு இலாபத்தை கொடுக்கவில்லை. இந்த வலைப்பூவில் இருந்து எனக்கு பணம் வந்தாக வேண்டும். அப்போதுதான் என்னால் நடப்பு கடன்களை கட்ட முடியும். ஆகவே தற்போதைய வியூவர்ஸ்ஸிடம் எப்படியாவது வியூக்களை அதிகரித்து சம்பாதிக்க உதவுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...