Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 76 - கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமாம் !



இந்த விஷயங்களில் எல்லாமே நடப்பது தவறுதான் இருந்தாலும் நடக்கக்கூடிய தவறுகளை கடைசி வரைக்கும் கண்டுகொள்ளக்கூடாது என்பது தான் எதிர் தரப்புடைய வாதம்‌. இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதும் பயப்படுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான் பயப்படுபவர்கள் அந்த தவறுகளை தடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அவர்கள் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்தான் இன்னுமே மோசமானவர்கள் ! கண்டுகொள்ளாமல் இருப்பவர்களால் ஒருவேளை அவர்களுடைய தவறுகளை தடுக்க முடிந்தாலும் அந்த தவறுகள் நடந்து விட்டு போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் அவர்களுடைய வேலையை பார்த்துவிட்டு சென்று விடுவார்கள்.இப்படி கண்டுகொள்ளாமல் இருந்து இருந்து உலகமே நாசமாக போகிறது. இவர்களை போல நானும் கண்டுகொள்ளாமல் இருந்து காணாமல் போகமாட்டேன். சம்பந்தப்பட்டவர்களை கண்டிப்பாக பாதுகாத்தே ஆக வேண்டும் அப்படி பாதுகாக்கவில்லை என்றால் நாம் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் ? பொதுவாக இந்த விஷயத்தில் இருக்கக்கூடிய கடினத்தன்மை என்னவென்றால் ஒரு ஒரு முறையும் இந்த விஷயத்தை செய்ய செய்ய மிகவும் சலிப்பும் வருத்தமும் உருவாகிறது. இது எல்லவற்றுக்குமே காரணம் என்ன ? கடவுள் நம்முடைய கதைகளை முடிக்க நினைக்கின்றாரா ? நான் விடமாட்டேன். நிச்சயமாக கடவுளுக்கு நம்முடைய வாழ்க்கை முழுதும் கொடூரங்களை கொடுத்து பின்னாட்களில் சந்தோஷங்களை அனுபவிக்க கூட முடியாமல் வாழ்க்கையையே காலி பண்ண உரிமைகள் இல்லை. இந்த விஷயங்களை நான் மற்றவர்களை போல எடுத்துக்கொள்ள மாட்டேன். உடலும் மனமும் சோர்வடைந்து தூக்கத்தை தான் கேட்கிறது. இந்த தூக்கத்தில் என்னுடைய கடந்த கால கஷ்டங்களை எல்லாம் கெட்ட கனவுகளை போல மறந்துவிட வேண்டுமா ? எதிர் தரப்புக்கு சொல்கிறேன் இது கண்டிப்பாக நடக்காது. அப்படி எதுவும் நடக்காது ! நடக்கவும் கூடாது !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...