Tuesday, April 9, 2024

CINEMA TALKS - GOOD ON PAPER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த திரைப்படம் ரொம்பவே நன்றாக இருந்தது இந்த திரைப்படம் இப்போதைக்கு பெண்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படையான ஒரு முக்கியமான பிரச்சனையை மையமாகக் கொண்டு இருக்கிறது. மிகவும் மோசமான மனது உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய வாழ்க்கையில் தான் ஒரு வசதி வாய்ப்புள்ள இளைஞர் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளவும் இந்த பெண்ணை காதலித்து ஏமாற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவும் ஏமாற்றுகிறார். இது எல்லாமே ஆரம்பத்தில் தெரியாமல் போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கும் அந்த கதாநாயகியின் கலாட்டாவான செயல்களும் நண்பர்களுடன் இணைந்து காதலிக்கும் பையனை பற்றி விசாரிக்கும் ஒரு சில காட்சிகளும் கலகலப்பான காட்சிகளும் எதார்த்தமாக அமைந்துள்ளதால் இந்த படத்துடைய திரைக்கதைக்கு நன்றாக உதவியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் கதாநாயகி ஒரு நகைச்சுவை பேச்சாளர் என்பதால் நகைச்சுவை திறன்மிக்க வசனங்களை பேசுவதை நிறைய படங்களில் பார்க்க முடியாது. இந்த படம் நிறைய ஃபேமினிஸ்ட்டான கருத்துக்களை சொல்லி இருக்கிறது. இந்த படமும் உங்களுடைய கலெக்ஷனில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய படம். புதுப்புது விஷயங்களாக இருந்தாலும் இந்த மாதிரியான படம் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் உதவியான படம் என்று சொல்லலாம்.  அடிப்படையில தன்னுடைய இயலாமையை மறைக்க முற்படும் ஆண்கள் சுயநலமாக நடந்துகொள்வதால் இந்த காலத்து பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த படம் கலகலப்பாக சொல்லியுள்ளது இந்த மாதிரியான நிறைய படங்களை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை குறைவான பட்ஜெட் என்பதால் குறைவான அளவில் படத்தின் காட்சிகளுமே அமைக்கப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது ஆனால் இந்த படம் குறைவான பட்ஜெட்டில் கூட படத்துடைய கதைக்கு தரமான பொடன்ஷியல் மிகவும் தகுந்த அளவுக்கு இருக்கிறது. இவ்வளவுதான் இந்த வலைப்பூவில் இன்றைய நாளுக்கான கருத்து இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு ஃபாலோவிங் கொடுக்கவும்

No comments:

இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 D

INTEL vs AMD பிரச்சினை எந்த நிறுவனம் சிறந்த கணினி செயலிகளை (CPU) உருவாக்குகிறது என்பதைப் பற்றியது.  2025 இல், இன்டெல் மற்றும் AMD இரண்டும் ச...