Monday, April 1, 2024

MUSIC TALKS - MEGATHTHIL ONDRAAI NINDROME ANBE MAZHAI NEERAI SIDHARI POKINDROM ANBE - SONG LYRICS - பாடல் வரிகள் !


மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே  
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளி ஆகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை கொண்டு உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்டு உன் மென்மையை காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்

கல்லாய் சிலநாள் தெரிவோம் அதனால் உறவா செத்துவிடும் 
கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றி விடும்
வெளியூர் போகும் கற்றும் ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்
பிரிதல் என்பது இலையுதிர் காலம் நிச்சியம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

அன்பே அன்பே உன்னை எங்ஙனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் இருந்திருக்கே !
உன்னை எண்ணி என் உயிர்கலம் உடைந்திருபேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்தரிப்பேன்

அன்பே அன்பே உன்னை எங்கனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்ணே பெண்ணே நம் பிரிவினில் துணை இருப்பேன்
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன்
ஏன் தான் அவரை கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்
பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்ட சாலை மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே 

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒருதுளி ஆகி முத்தாய் மாறிடுவோம் 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...