Thursday, April 4, 2024

CINEMA TALKS - PAAYUM PULI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படத்துடைய தொடக்கத்தில் சாதாரணமான ஒரு ஆக்ஷன் படம் போல இருந்தாலும் கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க டுவிஸ்ட்களில் படத்தின் திரைக்கதை வேகமாக நகர்கிறது. ஸாங்க்ஸ் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பிளஸ் பாயிண்ட். கிளைமாக்ஸ்ஸில் நல்ல திருப்பத்தை கொண்டுவந்தாலுமே எதிர்பார்த்த முடிவுதான். இயக்குனர் சுசீந்திரன் கமேர்ஷியல் மாஸ் படங்களுடைய ஸ்டைல்லில் திரைக்கதையை சொன்னாலும் பொதுவாக கதைக்களத்தை விட்டு வெளியே போகாதவாறு அனைத்து காட்சிகளையும் படத்தில் இணைத்து வைத்து இருப்பார். நம்ம தமிழ் சினிமாவில் என்ன ஃபார்முலாவுக்குள் படம் எடுத்தால் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை வருமோ அந்த ஃபார்முலாவுக்குள்ளே அனைத்து காட்சிகளையும் கொடுத்து கடைசியில் நிறைவான ஒரு கதை இந்த படத்தில் இருப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ்ஸூடன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு நல்ல சாய்ஸ் என்று இந்த படம் இருக்கிறது. இதுதான் கமேர்ஷியல் வெற்றிக்கான டேம்ப்லேட். இந்த டெம்ப்ளேட் அடிப்படையில் காமெடி , ரொமான்ஸ் , ஸஸ்பென்ஸ் , ஆக்ஷன் இது எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக கலந்து எடுத்துவிடலாம் என்பதால் படத்தின் நிறைய காட்சிகள் மிக்ஸ்ஸாக இருக்கிறது. அடிப்படையான ஹீரோ வேர்ஸஸ் வில்லன் கதையை மட்டுமே இன்னும் கொஞ்சம் எக்ஸ்டென்ட் பண்ணி ஒரு ஃப்யுர் க்ரைம் பிலிம்மாக எடுக்கலாம் இருந்தாலும் படத்துடைய பொடன்ஷியல் மற்றும் கேரக்ட்டர் ஆர்டிஸ்ட்டின் திறன்களுக்கு இந்த படம் கமேர்ஷியல் படமாக இருப்பதால்தான்  நல்ல வாய்ப்பாக இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...