Thursday, April 4, 2024

TAMIL TALKS - EP. 73 - இன்னும் கொஞ்சம் சொந்த கதை !






 ஒரு ஒரு நாளும் இந்த போரையும் இந்த போரினால் எனக்கு உருவாகும் பாதிப்புகளையும் நான் கவனமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இந்த சண்டையில் எனக்கு சப்போர்ட் என்று யாருமே இல்லை ஆனால் எனக்கு எதிராக இருப்பவர்கள் என்று பார்த்தால் பட்டியல் உலக அளவில் அடுத்த அதிசயம் என்று அனோன்ஸ் பண்ணும் அளவுக்கு பெரிதாக இருக்கிறது.  பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகர் ஒரு நேரத்தில் ஒரு வேலை அல்லது இரண்டு வேலையை செய்து கொண்டிருப்பார் அதனால் அவர்களுக்கு வாழ்க்கையினுடைய கடினமான போராட்டம் பெரிதாக தெரியாது. ஆனால் உண்மையான வாழ்க்கையில் நான் ஒரே நேரத்தில் 15 முதல் 20 வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் இதனால் எனக்கு மிகவும் சோர்வு மற்றும் குழப்பம் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் பயப்படக்கூடாது குழம்பி போகக்கூடாது இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக தோற்று போகக்கூடாது என்றெல்லாம் யோசித்து மற்றவர்கள் கட்டாயப்படுத்தும் போது அவைகள் எல்லாம் மிகவும் பெரிய விஷயம் என்று சொல்லாதீர்கள்.  ஒரே நேரத்தில் 15 வேலைகளை முதல் 20 வேலைகள் வரை பெரிய எண்ணிக்கையில் வேலைகளை செய்து முடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதே இல்லை அவர்கள் பாட்டுக்கு புரியாமல் அட்வைஸ் பண்ணிக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.  இந்தப் போர் நம்முடைய தொழிலாகும் இந்த போரை நாம் விட்டுவிட்டால் நம்முடைய நமக்கு சொந்தமான  அனைத்தையும் நம் இழந்து விடுவோம் ஆனால் இப்போது கூட போரில் நாம் தினம் தினம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நமக்கு இருக்கும் அனைத்தையும் இந்த போருக்காகவே கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து செலவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக சேகரிப்புகளை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த போரில் வெற்றியே அடைய முடியாது என்று கடவுள் திமிரும் கொழுப்பும் பிடித்து இப்படி முட்டாள்தனமாக முடிவை எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் சம்பவங்கள் அனைத்தும் இவ்வாறாக சென்று கொண்டிருந்தால் இந்த உலகத்தை யாரால் தான் காப்பாற்ற முடியும் ? இளம் வயதில் மனதுக்குள் நிறைய நல்ல கருத்துக்களை விதைத்து விடுகிறார்கள் ஆனால் வளர்ந்த பின்னால் அந்த கருத்துகளுக்கு தண்ணீர் ஊற்ற மறுத்து விடுவார்கள் உரமும் போட மறுத்து விடுவார்கள் விதைகள் வெயிலில் வெந்து மட்கி வீணாகத்தான் போகவேண்டும் என்றால் பின்னர் எதற்காக அந்த விதைகளை விதைத்து விட்டார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் இவைகள் எல்லாம் நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விதியின் செயல்கள்.  விதியின் செயல்களை நாம் குறை சொல்வது பயனற்றது என்று எல்லாம் சொல்லலாம்.  பல தலைமுறைக்கு சாப்பிட சொத்துக்களை சேர்த்து வைத்துக்கொண்டு கடினமான முயற்சிகள் இல்லாமல் வெற்றியடைபவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் என்று கடவுளின் கேவலமான முடிவு எடுக்கும் திறனால் நடக்கும் இந்த முடிவுகளால் மிகவும் மோசமாக உலகம் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இவைகளை சக்திகள் இல்லாமல் சரி பண்ணவும் முடியாது !!


No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...