வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
செவ்வாய், 2 ஏப்ரல், 2024
GENERAL TALKS - நல்லவர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது !
வியாபாரி ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஒரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனை கண்ட வியாபாரி குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார்.
மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் வியாபாரி. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு.
குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில வாரங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார். அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான்.
வியாபாரி மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். வியாபாரி மெல்லச் சிரித்தார். "சொல்லாதே!" என்றார்.
திருடன் மிரண்டான்."எது?என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான்.
வியாபாரி சொன்னார். "குதிரையை நீயே வைத்துக்கொள்.ஆனால்,நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள். நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும். தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய,நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும். புரிகிறதா?" என்றார்.
பேசிக்காக நல்லவர்களாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு கெட்டது பண்ண கூடாது என்று மட்டும் நினைக்காமல் யாருக்கும் எந்த கெட்டதும் நடக்க கூடாது என்று நினைப்பதால்தான் கடவுள் அவர்களிடம் இருக்கும் சட்டை பாண்ட் கூட பறித்துவிட்டு நடுத்தெருவில் கோழையாக நிறுத்திவிடுகிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...

-
அலையே அலையே காட்டுல மழையே அலைலே அல்ல ட்யூட் செதற பதற உடுவன் நான் உதற அல்லல்லே அல்லா நண்பா ஊரும் ரத்தம் 10000 AURA வை கொண்டு அச்சாது ந...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக