Friday, April 5, 2024

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE 3 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஒரு படத்துடைய கிளைமாக்ஸ் வரைக்குமே ஒரு சஸ்பென்ஸ் கொடுத்து கிளைமாக்ஸ்ஸில் கூட அந்த சஸ்பென்ஸ் என்ன என்று கடைசி வரைக்குமே சொல்லாமல் போனால் எப்படி இருக்கும் ? அதுதான் இந்த படத்துடைய கதை , இந்த படம் வேற லெவல் ஆக்ஷன் அட்வென்சர், இந்த படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் RABBIT FOOT என்பது என்ன என்று கடைசி வரைக்கும் சொல்லி இருக்க மாட்டார்கள் !! மிஷன் இம்பாஸிபில் பாகம் 3 - இந்த படம் இந்த படங்களின் வரிசையில் கொஞ்சம் வித்தியாசமான படம் என்றே சொல்லலாம். ஈதன் ஹன்ட் இந்த படத்தில் என்னதான் இம்போஸ்சிபல் மிஷன் ஃபோர்ஸ் அசோஸியேஷனில் இருந்து விலகி இருந்தாலும் விதி அவரை விட்டு வைப்பதாக இல்லை. வில்லன்களின் நெட்வொர்க் ராபிட் ஃபுட் என்ற கோட் நேம் கொண்ட ஒரு குறிப்பிட்ட பொருளை கடத்தி செல்ல ஈதன்னின் திறன்களை பயன்படுத்த முயற்சி செய்து அவருடைய குடும்பத்தை கடத்தி விடுகிறார்கள். அடுத்ததாக என்ன நடக்கும் என்று நீங்கள் எதிரபார்க்கிறீர்கள் ? நிமிடத்துக்கு நிமிடம் ஆக்ஷன் , சேசிங் மற்றும் அட்வென்சர்தான். கடைசி வரைக்கும் அந்த ராபிட் ஃபுட் என்றால் என்னவென்று படத்தில் சொல்லியே இருக்க மாட்டார்கள் ஆனால் திரைக்கதையில் சலிப்பு என்பதே உருவாகாது. ஒரு தரமான திரைக்கதையானது இந்த படத்தின் மத்தியமான கதைக்களத்துக்கு எந்த பாதிப்பையும் உருவாக்காமல் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த சம்பவங்களை பின்னி கதையை நகர்த்த காரணமாக இருக்கிறது. இந்த திரைப்படம் இந்த திரைப்படங்களின் வரிசையின் ஜேனரில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது என்பதை உறுதியாக சொல்லலாம். இந்த படம் பார்க்கும்போதே இந்த படத்தில் ஆக்ஷன் மட்டுமே ஃபோகஸ் பண்ணி ஆக்ஷன் படங்களின் தொடராக மிஷன் இம்போஸ்சிபல் தொடரை மாற்ற எல்லா முயற்சிகளையும் பண்ணி இருக்கின்றார்கள் என்றும் அந்த வருடத்தின் ஆடியன்ஸ்க்கு ஏற்றவாறு கதையை நன்றாக மாற்றம் பண்ணி இருக்கிறார்கள் என்றும் இந்த படம் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். வெளிவந்த நாட்களில் இந்த படம் சூப்பர் ஹிட்தான். ஆகையால் கண்டிப்பாக இந்த படத்தினை எல்லோருமே ஒரு முறை பார்க்கலாம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...