Tuesday, April 2, 2024

CINEMA TALKS - MUTANT MAYHEM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!




இன்றைய வார கடைசிக்கு நல்ல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு அனிமேஷன் படம் பார்க்கலாம் என்றால் இந்த படத்தை உங்களின் செலக்ஷன் லிஸ்ட்டில் வைத்துக்கொள்ளலாம். டீன்னேஜ் மியூட்டன்ட் நிஞ்சா டேர்ட்டில்ஸ் என்ற கதையின் லைவ் ஆக்ஷன் படங்கள் நிறையவே பார்த்து இருக்கின்றோம் ஆனால் இது அனிமேஷன் படம் என்பதால் நிறைய கிரியேடிவிட்டி இந்த படத்தில் இருக்கிறது. நம்முடைய டேர்ட்டில்ஸ் நண்பர்களை உருவாக்கிய அதே சோதனையின் விளைவாக இன்னொரு பக்கம் இன்னும் சில விலங்குகளும் புத்திசாலி மியூட்டேன்ட் விலங்குகளாக டெக்னாலஜியை கொள்ளை அடித்து நகரத்தை நாசம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது இதுவரையில் என்னதான் நிஞ்சா கலைகள்ளில் தேர்ச்சி இருந்தாலும் வெளி உலகத்தின் பிரச்சனைகளில் காலம் இறங்காத நம்முடைய நண்பர்கள் இவர்களை விட வலிமையான எதிரிகளாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டு சமாளித்து நகரத்தை காப்பாற்றுகிறார்கள் என்பது ஒரு வரி கதை. படத்தில் ஸ்பைடர் மேன் இன் ஸ்பைடர்வேர்ஸ் படங்களின் அனிமேஷன் ஸ்டைல் மற்றும் கார்ட்டூன் ஆக்ஷன்ஸ் சிறப்பாக இருப்பதால் குழந்தைகளுக்கு இந்த படம் நன்றாக பிடிக்க வாய்ப்பு உள்ளது. சமீப காலத்தில் நிக்லோடியன் ஸ்டுடியோவில் இருந்து ஒரு நல்ல படைப்பு இந்த திரைப்படம் என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகாது.  

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...