சனி, 30 மார்ச், 2024

MUSIC TALKS - NAAN VAANAVILLAIYE PAARTHEN ATHAI KAANAVILLAIYE VERTHEN - TAMIL LYRICS - பாடல் வரிகள் !!

நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலால் வீசச் சொல்லியா கேட்டேன் ?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் !

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ ?
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ இரு கண்கள் ஆகிவிடுமோ ?

தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ ?
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ ?
பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலால் வீசச் சொல்லியா கேட்டேன் ?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்

சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவிவிட மார்பில் ஒதுங்கி விடுவேன்

பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது மாறனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலால் வீசச் சொல்லியா கேட்டேன் ?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் !

WHAT A LYRIC WRITING !! THIS IS AWESOME !! 

கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - SHARK BOY AND LAVA GIRL MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

  மேக்ஸ் என்ற பத்து வயது சிறுவன், தனிமையும் பள்ளியில் துன்புறுத்தலையும் சந்திக்கிறான். அதிலிருந்து தப்பிக்க, அவன் பிளானெட் ட்ரூல் என்ற கனவுல...