Friday, April 5, 2024

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE 1 - 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


மிஷன் இம்பாஸிபில் பாகம் 1 மற்றும் பாகம் 2. ஜேம்ஸ் பாண்ட் போல  ஸ்பை ஏஜென்சியில் அரசாங்கத்தை சார்ந்தும் சாரததுமாக இருக்கக்கூடிய சிக்கலான ஆபத்தான மிஷன்களை எல்லாம் உயிரை பணயம் வைத்து உயர் தர டெக்னாலஜி கருவிகளுடன்  புத்தியை பயன்படுத்தி தெளிவாக பிளான் போட்டு முடிக்க வேண்டிய இண்டர்நேஷனல் லெவல் மிஷன்களை முடிக்கும் ஒரு திறமையான அமைப்புதான் இந்த இம்பாசிபில் மெசின் ஃபோர்ஸ். 

இளம் வயது ஏஜென்ட் என்றாலும் சேர்ந்த வருடங்களில் நன்றாக செயல்பட்டு சிறப்பாக நாடு விட்டு நாடு கடந்து முடிக்கும் மிஷன்களில் வெற்றியை அடைந்துகொண்டு இருக்கிறார் நமது கதாநாயகன் ஈதன் ஹேன்ட் ஆனால் இந்த ஒரு குறிப்பட்ட மிஷன் மட்டும் அவருக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமைகிறது. மொத்த பிளானில் எங்கேயோ சதி நடந்து இவர்களுடைய குழுவின் மேல் பதில் தாக்குதல் நடப்பதால் பயங்கரமாக சண்டை போட்டு கவனமாக உயிரை கையில் பிடித்து வெளியே வரும் ஈதன் பின்னாட்களில் எப்படி தன்னை சுற்றி நடந்துகொண்டு இருந்த சதியை கண்டறிந்து அதன் ஆழம் வரை சேர்ந்து வெற்றி அடைகிறார் என்பதுதான் இந்த ஆக்சன் அடவெஞ்சர் திரைப்படத்தின் கதைக்களம்.




இந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் மிகவும் எதிர்பார்ப்போடு வெளிவந்த படம் மிஷன் இம்பாஸிபிள் பாகம் 2. இந்த படத்தில் ஈதன் ஹன்ட்க்கு என்று ஒரு கதாநாயகி கிடைத்து இருந்தாலும் இன்டர்வேல காட்சிகளில் அந்த கதாநாயகி வில்லனின் முன்னாள் காதலியைன்று தெரியவரவே தன்னுடைய காதலை தியாகம் செய்து மெஷனுக்காக வில்லனின் இடத்துக்கே காதலியை அனுப்புகிறார்கள்‌. இவ்வாறாக சில வாரங்கள் வில்லனின் திட்டங்களை தெரிந்துகொண்டாலும் கடைசியில் வில்லனுக்கு இந்த விஷயம் தெரியவரவே உலக அளவில் கொடிய நோயை பரப்புவதற்காக காதலியை வைரஸ் நோயாளியாக மாற்றி அவருடைய உயிருக்கு ஆபத்தை கொடுக்கும்போது தன்னை நம்பிய பெண்ணை எப்படி ஈதன் காப்பாற்றுகிறார் என்று இந்த படத்தின் கதைக்களத்தில் இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் தரமான ஆக்ஷன் காட்சிகள் ஸ்டண்ட் வொர்க்குகள் இருப்பதோடு மட்டும் இல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...