Saturday, April 13, 2024

CINEMA TALKS - ANBE VAA - 1965 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




அன்பே வா - இன்னைக்கு கூட ஒரு படத்தை பார்த்தால் பீல் குட் ஃபீலிங் கிடைக்கும் என்றால் அப்படி ஒரு மாயாஜாலமாக இந்த படம் இருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத படங்கள் என்று ஒரு சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் இந்த படத்தை சேர்த்துக் கொள்ளலாம். அன்பே வா எப்போதுமே ஒரு கமர்சியல் படத்துக்கான பெஞ்ச் மார்க்காக இருக்கிறது. இதுபோல கமர்சியலாக இருக்கக்கூடிய ஒரு ரொமான்டிக் காமெடி படம் என்னென்ன விஷயங்களை எல்லாம் கொண்டிருக்க வேண்டுமோ எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. நிறைய சாங்ஸ் , கொஞ்சம் கதை , கொஞ்சம் கலகலப்பு என்று படத்தை பார்க்க வரும் ஆடியன்ஸ்கள் மிகவும் ரசிக்க கூடிய வகையில் ஆக்சன் , டிராமா , ரொமான்ஸ் , காமெடி என்று நிறைய விஷயங்களை கலந்து உங்களுக்கு பொழுதுபோக்கு கொடுக்க கூடிய ஒரு திரைப்படம் தான் இந்த அன்பே வா என்ற திரைப்படம். இப்போது வரைக்கும் அன்பே வா திரைப்படம் இதுவரைக்கும் நான் எப்போதுமே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாக இருக்கிறது


பொதுவாக ஒரு படத்தை மறுபடியும் மறுபடியும் பார்க்கலாம் என்றும் இந்த படம் கண்டிப்பாக பார்க்க நன்றாக இருக்கும் எனறும் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு ஒரு அருமையான உணர்வை ஒரு படம் ஏற்படுத்திவிட்டால் அதுவே அந்த படத்துக்கான பெரிய சாதனை தான் என்றே சொல்லலாம். அந்த வகையில் அன்பே வா என்ற இந்த திரைப்படம் ஒரு என்னுடைய பெர்சனல் பேவரைட் ஆக இப்போதுமே இருக்கிறது. எப்போதுமே இந்த படத்தை பார்த்தால் ஒரு நல்ல ஃபீல் குட் ஃபிலிம் திரைப்படம் என்ற கருத்து மனதுக்குள் இருக்கிறது. இதுக்கு காரணம் என்னவென்றால் அந்த காலத்தில் வெளிவந்தாலும் இந்த படத்தை கதைகள் மற்றும் காட்சியமைப்பு இந்த படத்துக்கு ஒரு தனியான ரசனையை கொடுத்து இருக்கிறது. எப்படி ஒரு பணக்கார இளைஞராக இருக்கும் ஜே பி அவருடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய ஒரு பெண்ணை காதலிக்கிறார் ?. உண்மையை சொல்லாமல் ஒரு நடிப்புக்காக தன்னை ஒரு ஏழை என்ற அறிமுகம் செய்து கொண்டு எப்படி அந்த பெண்ணை உண்மையாக காதலிக்கிறார் ?. ஒரு காலத்தில் ஜே பி பணக்காரனாக என்ற உண்மையை தெரியும்போது அப்போது என்ன முடிவு எடுக்கிறார்கள் ? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸாக இருக்கிறது


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...