Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 80 - இது மிகவுமே கவனிக்கப்பட வேண்டிய குற்றம் !




இந்த காலத்தில் புத்திசாலிகளாக இருக்கும் பதின்ம வயதினர் போதைப் பொருட்களுக்கு மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது இந்த போதைப் பொருட்களை எல்லாம் கொண்டு வந்து குழந்தைகளுக்கு விற்பனை பண்ணுவது யார்? எத்தனை பேருடைய சப்போர்ட்டில் இந்த போதைப் பொருட்களை எல்லாம் கொண்டு வந்து இப்படி விற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பொதுமக்கள் கண்டு கொள்ள வேண்டும் ஒரு நல்லபடியான சமூகத்தில் இந்த மாதிரியான விஷமான விஷயங்களை கொண்டு வந்து சமூகத்தில் இப்படிப்பட்ட தவறான மாற்றங்களை எல்லாம் செய்து கொண்டு இருந்தால் இது எப்படி நன்றாக இருக்கும் ? ஒரு சில பேர் கண்டுகொள்வதே இல்லை. இப்போது எல்லாம் உங்களுக்கு இந்த போதை எப்படி வேலை செய்கிறது என்பதை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் இப்போது ஞாபகப்படுத்த போகிறேன் இந்த போதை எப்படி வேலை செய்கிறது என்றால் நம்முடைய மூளையின் பெரும்பாலான பாகங்களை சேதப்படுத்துகிறது நம்முடைய மூளையில் போதை சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்துக் கொண்டால் மட்டும் தான் மூளை சுறுசுறுப்பாகவும் உடல் நன்றாக இருக்கும் படியாக பார்த்துக் கொள்கிறது எப்போது நாம் போதை சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த உடலும் மனதும் மிகப்பெரிய காயங்களையும் வேதனைகளையும் கண்ணுக்குத் தெரியாத அளவில் வருத்தங்களையும் மனது போதுமான ரசாயன கலவைகள் உடலில் இல்லாததால் கஷ்டப்பட்டு வலியாக அனுபவிக்கிறது இவ்வாறு அனுபவிப்பதால் இந்த உடல் மிகவும் சோர்வாக அடைகிறது ஆனால் இந்த போதை போன்ற விஷயங்களை மறுபடியும் எடுத்துக் கொண்டால் இந்த உடல் மிகவும் பழைய நிலைமைக்கு போவதாக கற்பனையில் தள்ளப்படுகிறது இதுவே ஒரு வகையான அடிமைத்தனம் தான் மேலும் போதை ஒரு கட்டத்தில் போதாமல் போனால் அதைவிட பெரிய போதை பொருள் அதைவிட மிகவும் அதிக அளவில் போதை பொருளை வாங்கி நிறைய காசுகளை போட்டு காசை தண்ணீர் போல செலவு செய்து நம்முடைய மனது நிம்மதியாக இருந்தால் மட்டுமே போதும் என்று ஒரு நிலைமையை நமக்கு கொண்டு வந்து விடுவோம் இப்படி ஒரு நிலைமையை நாம் கொண்டு வந்து விட்டால் இதனால் மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் நம்முடைய உடலும் மனதும் தொடர்ந்து சேதம் அடைந்து கொண்டே இருக்கும் ஆனால் நம்மாலும் எதுவுமே செய்ய முடியாது இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நீங்கள் அனுமதி கொண்டே இருக்கிறீர்கள் இது எந்த அளவுக்கு தவறு என்று நடைமுறை சாத்தியத்தில் பாதிப்புகள் மிகவும் அதிகமாகிக் கொண்டிருந்தால்தான் உங்களுக்கே புரியும். இது எல்லவளவு கேவலமான விஷயம் தெரியுமா ? 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...