Tuesday, April 2, 2024

CINEMA TALKS - VARUTHTHAPPADAATHA VAALIBAR SANGAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூல சூப்பர் டூப்பர் ஹிட் ஆக காரணம் என்ன ? காமெடி , காமெடி , ஃப்யுர் காமெடி , அப்படியே பறந்து பறந்து அடிப்பதும் பன்ச் வசனங்கள் பேசுவதும்தான் படம் என்று இல்லாமல் ஒரு ஒரு சின்ன சின்ன வசனத்திலும் ஒரு கிராமத்துக்கு உள்ளே நடக்கும் கலகலப்பான சம்பவங்களை மட்டுமே கதையில் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படத்துடைய ப்ரொடக்ஷன் வேல்யூ சிறப்பாக இருப்பதால் வெளிவந்த காலத்தில் எல்லோருமே புது முகங்கள் என்றாலும் சத்யராஜ் நகைச்சுவையில் ஒரு சிறப்பான கியூட் வில்லனாக இந்த படத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மனதை அள்ளிக்கொள்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா அவர்களுடைய ரொமான்டிக் போர்ஷன் என்றால் காமிரா மற்றும் கலர் கரேக்ஷன் அவ்வளவு வண்ணாமயமாக கண்களை பறிக்கும் அளவுக்கு இருக்கிறது. இரு தனித்தனி குழுக்களாக ஒருவரை இன்னொருவர் கலாய்த்துக்கொண்டே இருந்தாலும் படத்தில் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டவில்லை. குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். மோசமான காட்சிகள் என்று எதுவுமே இல்லை. நல்ல ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தில் இருந்து உங்களுக்கு கிடைக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவில் எப்போதுமே இருந்துகொண்டே இருக்க வேண்டும். மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டும் மாயாஜாலம் இந்த படத்தில் இருக்கிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...