Tuesday, April 2, 2024

GENERAL TALKS - வலைப்பூ முன்னேற்றத்துக்கு ஒரு சோதனை !!




இந்த டெக்ஸ்ட்கள் எழுதப்பட்ட பாணியை கவனிக்கவும் :



1. ஒரு டூவீலர்காரன் க்ராஸிங்க்ல ரெட் சிக்னல் போட்டிருந்தும் கவனிக்காதவன் மாதிரி போனான்.அவனைப் பாத்து இன்னும் அஞ்சாறு டூ வீலர்காரங்களும் ரெட் சிக்னல மதிக்காம போனாங்க. இத கவனிச்ச ட்ராஃபிக் கான்ஸ்டபிள் முதல்ல போனவனை வுட்டுட்டு இந்த அஞ்சு பேரையும் நிறுத்தி ஃபைன் போட்டாரு.
அதுல கடுப்பான ஒருத்தன் "யோவ், முதல்ல போனவனை ஏன்யா விட்டே" ன்னு கேட்க கான்ஸ்டபிள் சொன்னாரு,"அவரு எங்க மார்க்கெட்டிங் ஆளு. இப்படி சிக்னல மதிக்காம போயி போயி மத்தவங்களுக்கு ஆச காட்டி எங்க மன்த்லி டார்கெட்ட முடிக்க ஹெல்ப் பண்ணுவாரு"! ! என்றான். அப்போ நான்தான் அப்பாவியா !!

2. ஒரு ஊரில் ஒரு பெரிய இடத்து பையன் எப்போது பார்த்தாலும் அதிகமாக பணம் காசு செலவு பண்ணி அப்பாவின் காசை கரைத்துக்கொண்டு இருந்தான். ஒரு துறவியிடம் அப்பா இவனை திருத்த உதவி கேட்கவும் அந்த துறவி இவனுக்கு ஒரு  பாறாங்கல்லை மலை உச்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று ஒரு வேலை கொடுத்தார். இவனும் கஷ்டப்பட்டு பாறாங்கல்லை மேலே கொண்டு வந்ததும் அந்த உயரத்தில் இருந்து பாறாங்கல்லை உருட்டிவிட சொன்னான். இவனோ கஷ்டப்பட்டு எடுத்து வந்த பாறாங்கல்லை எதுக்காக மறுபடி கீழே போடவேண்டும் என்று கேள்வி கேட்கவே இந்த பாறை போலவே உழைத்து சேர்த்த பணத்தை செலவு பண்ணுவது எளிது மேலே எடுப்பது போல சம்பாதிப்பது மிகவும் கடினமானது மகனே என்றும் உழைப்பு பண்ணினால்தான் பணம் கைகளில் நிற்கும் உழைப்பை வீணாக்காதே என்று துறவியும் ஒரு அட்வைஸ் கொடுத்து பணத்தின் அருமையை புரிய வைத்தார் !
 

3. மன்னர் ஒருவர் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை பார்த்து ”மழை வருமா?”எனக் கேட்டார்.

”வராது” என்றான் அமைச்சர் . வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவர் ஒருவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தார். 

அதைப் பொருட்படுத்த்தாமல் வேட்டைக்கு போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போது கடுமையாக மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.

திரும்பும் வழியில் குடியானவரைச் சந்தித்து, ”மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டார். 

அவரோ, ”மன்னா, எனக்குத் தெரியாது. ஆனால் என் கழுதைக்குத் தெரியும். மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும். ”என்றான்.

உடனே மன்னர் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினார்.

“அதில் தான் மன்னர் ஒரு தவறு செய்து விட்டார். என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன. ”

4. கணவனும் மனைவியும் பயங்கர சண்டை. அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை.

மனைவியால பொறுக்க முடியவில்லை. கணவன் கிட்ட வந்தாங்க. இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை. ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம்னாங்க.

கணவன்: ரொம்ப நல்லது. என்ன செய்யலாம் சொல்லு…?

மனைவி: நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க. நான் பெரிய மனசு பண்ணி உங்களை மன்னிச்சு விட்டுடறேன்.

3 comments:

  1. ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருந்தது. நானும் கேட்டேன் “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…! ” என்று கேட்டேன். “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…!!” என்றார் அவர். ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்ட பின் நாங்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகையில் அவரை பார்த்து “ஏங்க மொய் வைக்கலே…” கேட்டேன் அவரிடம். அதுக்கு அவர் சொன்னார், “அட… மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல… நான் ஏன் மொய் வைக்கணும்?” !!!

    ReplyDelete
  2. செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன. மூன்றையும் பார்த்துவிட்டு எந்த தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

    முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை பிரதிபலித்தது. இது வேண்டாம் என்று அடுத்த அறைக்குப் போனான்.

    அங்கே, எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன், “ஐயோ. இது வேண்டாம்” என்று அடுத்த அறைக்குத் தாவினான்.

    மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் படுரிலாக்ஸ்டாக காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். “ஆஹா. இதுதான் நான் தேடிவந்த இடம். இங்கேயே நான் இருந்துவிடுகிறேனே” என்று தன் முடிவையும் சொல்லிவிட்டான்.

    ”நீங்கள் போய் இந்தக் குழுவில் சேர்ந்துகொள்ளலாம்” என்று அனுமதியும் தரப்பட, உள்ளே போய் ஒரு கப் காபி வாங்கி சுவைக்க கையிலெடுத்ததும் அங்கே ஒரு எஜமானரின் குரல்.

    “ஓகே.! உங்களது காபி இடை வேளை முடிந்துவிட்டது. எல்லோரும் அந்த தீச்சட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.

    அந்த கூடையின் அருகில் இவ்வாறு ஒரு அறிவிப்பு, "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள். கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

    சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

    ஒரு குழந்தை அதே போல் சாக்லேட் பெட்டியின் அருகில் சென்று இவ்வாறு எழுதியது. 'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!

    ReplyDelete

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...