Tuesday, April 2, 2024

CINEMA TALKS - VETTAIKKARAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



காவல் துறை அதிகாரியாக ஆகவேண்டும் என்று எப்போதுமே ஆசைப்படும் சுறுசுறுப்பான இளைஞர் படிப்புக்காக பெரு நகரத்தில் வருகிறார். ஆனால் அந்த பெரு நகரமே ஒரு கொலைகார ரௌடி கும்பலின் கட்டுப்பாட்டில் அச்சுறுத்தலில் உள்ளது. நகரத்தில் இந்த இளைஞருக்கு தெரிந்த குடும்பத்து பெண்ணை காப்பாற்ற முயற்சித்து ஒரு பெரிய க்ரைம் நெட்வொர்க்கின் எதிர்ப்பை சம்பாதித்து பின்னாட்களில் நிறையவே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இது எல்லாமே கடைசியில் கோபத்தில் கொண்டுவந்து அவர்களை நேருக்கு நேராக எதிர்த்து மோதி கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரு கமேர்ஷியல் படமாக வெளிவந்த இந்த படத்தில் கண்டிப்பாக சிறப்பான காமிரா வொர்க்ஸ் மாஸ் லேவேல் மியூசிக் மற்றும் நல்ல நடிப்பு திறன்கள் இருப்பதை யாருமே மறுக்க முடியாது. சன் பிக்ச்சர்ஸ்ஸின் மேஜர் வெளியீடு என்பதால் மிக மிக பெரிய மார்க்கெட்டிங் இந்த படத்துக்கு கிடைத்து வெளிவந்த காலத்தில் செம்ம ஹிட் என்று இந்த படம் இருந்தது. அது என்னவோ என்ன மாயமோ தெரியாது விஜய்க்கு எப்போதுமே கமேர்ஷியல் படங்கள் நன்றாகவே செட் ஆகிவிடும் வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியை ஒரு மாயாஜாலம் போல கொடுத்துவிடும் அந்த மாயாஜாலம் இந்த படத்திலும் நடத்துள்ளது. மொத்தத்தில் நல்ல கமேர்ஷியல் படம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...