Wednesday, January 3, 2024

SIMPLE TALKS - குறைகளை சொல்பவர்கள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்க அனுமதிக்க வேண்டாம் !




 ஒரு மனிதனின் வாழ்க்கையில் கௌரவம் என்பது மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒரு பகுதி. இந்த உலகத்தை பாருங்கள். எல்லோரும் சமம் என்ற சமுதாய நல்லிணக்கம் இந்த உலகத்தில் இருக்கிறதா ? மக்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் அன்பால் இணைந்து ஆதரவு கொடுத்து இருக்கின்றார்களா ? கவனமாக யோசித்து பார்த்தால் நிறைய இடங்களில் உயர்வான இடத்தில் இருப்பவர்கள் குறைவான இடத்தில் இருப்பவர்களை அவமானம் என்றே பார்க்கின்றனர். மேலும் குறைவான இடத்தில் இருப்பவர்கள் கடைசியில் மேலே வரவே கூடாது என்ற ஒரு மோசமான எண்ணமும் உயர்வான இடத்தில் இருப்பவர்களுக்கு உள்ளது. இப்படி உயர்வான இடத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து அவமானங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் எத்தனை நாட்கள்தான் தாங்க முடியும். பின்னதாக உயர்வான இடத்தில் இருப்பவர்களால் வெற்றியை அடையாமல் குறைவான இடத்தில் இருப்பவர்கள் அதே இடத்தில்தான் அடைபட்டு கிடைக்க வேண்டுமா ? இது நியாயமானது என்று எப்படி சொல்ல முடியும். உன்னால் இந்த இடத்தில் இருப்பதற்கு தகுதி இல்லை என்றும் அப்படிப்பட்ட தகுதி உனக்கு எப்போதுமே வராது என்றும் சொல்லி சொல்லியே உயரத்தில் இருப்பவர்கள் குறைவாக இருப்பவர்களை ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள் அடைத்து வைக்க பார்க்கின்றார்கள். இந்த உலகத்தில் குறைவாக இருப்பவர்கள் கடைசி வரையில் உயர்வாக இருப்பவர்களின் உலகத்தில் அவர்களை சார்ந்தே வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்றுதான் உயர்வாக இருப்பவர்கள் ஆசைப்படுகிறார்கள். நான் சொல்வது உங்களுக்கு நம்ப முடியாத விஷயமாக இருக்கலாம் ஆனால் இதுதான் பள்ளிக்கூடங்களில் நடக்கிறது. பள்ளிக்கூடங்களில் படிப்பை நன்றாக படிப்பவர்கள் நல்ல பாராட்டுகளை பெற்று உயர்வான இடத்தில் இருக்கின்றார்கள். இப்போது படிப்பு சரியாக படிக்க முடியாமல் இருப்பவர்கள் சங்கடங்களுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளக்கப்படுகின்றார்கள். இது எப்படி தெரியுமா இருக்கிறது ? குறைவாக படிப்பவர்கள் கிளாஸ் வகுப்பில் சப்ஜெக்ட்டில் ஏதாவது ஒரு விஷயத்தை சந்தேகம் என்று கேட்டாலே வெறுப்புதான் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகமாகிறது. ஹோட்டல்லில் சாப்பாட்டுக்கு பணம் கொடுக்கப்பட்ட பின்னாலும் சாப்பிட வருபவர்களின் தாழ்வு மனப்பான்மையை பயன்படுத்தி சாப்பாடு உங்களுக்கு கிடைக்காது என்றும் நீங்கள் வெளியே செல்லலாம் என்றும் சொல்வது போல இருக்கிறது. இதுதான் நான் உங்களுக்கு சொல்ல வரும் விஷயம். நீங்கள் குறைவான இடத்தில் இருந்தால் உங்களுக்கான தாழ்வு மனப்பான்மையை உயர்வான இடத்தில் இருப்பவர்கள் உங்களுடைய மனதுக்குள் விதைத்து விடுவார்கள். செடியாக இருக்கும்போதே உங்களுடைய அந்த மனப்பான்மையை விட்டுக்கொடுத்து உங்களுடைய வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். அதுக்குதான் உங்களுக்கு கௌரவம் தேவைப்படுகிறது. கௌரவம் என்பது ஒரு கோஸ்ட் போன்றது. மிகவும் சக்திவாய்ந்த விஷயம் அதே சமயத்தில் மிகவும் அதிகாரமாக இருக்கும் விஷயம். உங்களுடைய குறைகள் எப்போதுமே நிர்ந்தரமானது அல்ல. போதுமான பணம் , பொருட்கள் , செயல்கள் , அறிவு , அனுபவம் மற்றும் நலம் இருந்தால் உங்களின் குறைகளை எளிதில் எடுத்துவிடலாம். உங்களுடைய குறைகள் உங்களின் மனதுக்குள் தாழ்வு மனப்பான்மையை விதைக்க நீங்கள் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதிக்காமல் உங்களுடைய தனிப்பட்ட கௌரவத்தை பெற்று உங்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டும்.

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...