Wednesday, January 3, 2024

CINEMA TALKS - KALAKALAPPU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


கும்பகோணத்தில் ரேஸ்ட்டாரன்ட் நஷ்டத்தில் ஓடிக்கொண்டு இருந்தாலும் எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று நம்பிக்கையோடு இருக்கும் சீனு , இவருடைய வாழ்க்கையில் வந்த பழைய நண்பன் ரகு பொருட்களை கொள்ளையடிப்பதில் எக்ஸ்ப்பெர்ட் , இவர்களுடைய வாழ்க்கையில் தனித்தனியாக காதல் சென்றுக்கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் இவர்களுடைய வாழ்க்கை ஒரு நகைக்கடை வியாபாரி மறைத்து வைத்த வைர பொட்டலம் இவர்களிடம் கிடைக்கும்போது எப்படி மாறுகிறது என்றுதான் படத்தின் கதைக்களம். சுந்தர் சி எப்போதுமே நிறைய நகைச்சுவை நிறைந்த ரொமான்டிக் கதைகளை பெஸ்ட்டாக ப்ரெசெண்ட் பண்ணுவார் அந்த வகையில் இந்த படம் கண்டிப்பாக எதிர்பார்த்த சக்ஸஸ் வெளிவந்தபோது கொடுத்து உள்ளது. லாஜீக் எப்போதுமே இது போன்ற காமெடி படங்களுக்கு பார்க்க கூடாது. ப்ரொடக்ஷன் வேல்யூவுக்கு போதுமான அளவுக்கு திரைக்கதை நல்ல பொழுதுபோக்கு வேல்யூவை கொடுக்கிறது. ஸாங்க்ஸ் மற்றும் பின்னணி இசை படத்துக்கு சப்போர்ட். விமல் , சிவா , ஓவியா , அஞ்சலி , சந்தானம் , ஜோன் விஜய் , சுப்பு என்று ஸ்டார் வேல்யூ படத்துக்கு ரொம்பவுமே பெரிய சப்போர்ட் , மேலும் நிறைய சீனியர் நகைச்சுவை கலைஞர்களுக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் நன்றாகவே கிடைத்து உள்ளது. கிளைமாக்ஸ் வரைக்கும் ஒரு ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் வேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். இன்னும் எதனால் அரண்மனை படங்களின் விமர்சனம் இல்லை என்று நீங்கள் கேட்கலாம். காரணம் என்னவென்றால் அரண்மனை படங்கள் நான் இன்னும் பார்க்கவே இல்லை. இந்த படத்துக்கான என்னுடைய விமர்சனம் இதுதான். நம்ம வலைப்பூவை கண்டிப்பாக சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளுங்கள் !! 


No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...