Tuesday, January 2, 2024

GENERAL TALKS - தோல்வி நிலையானது என்று உங்களை நினைக்கவைப்பது என்ன விஷயம் ?


ஒரு ஒரு இடத்திலுமே தோல்விக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஒரு இமாஜினேஷன் பண்ணி பாருங்களேன். ஒரு கிளாஸ்ல 100 பேர் இருந்தால் அந்த 100 பேராலுமே நல்ல மார்க்ஸ் அல்லது நல்ல ரேங்க்ஸ் எடுக்க முடியாது, குறைவான ரேங்க் , குறைவான மார்க் எடுப்பவர்களுக்கு மனதுக்குள்ளே தான் எப்போதுமே தோல்விகளை சந்திக்கும் மனிதன் என்ற நிலைப்பாடை உருவாக்கிவிடும். ஆனால் அப்படியே இருபது வருடங்கள் நகர்த்திய பின்னால் எதிர்காலத்தில் பார்த்தால் #1 ஆம் ரேங்க் எடுப்பவர்களை விட #50 ரேங்க் எடுப்பவர்கள் ரொம்பவுமே அதிகமாக பணம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறார்கள்.  இங்கே வெற்றி என்பது ரொம்பவுமே OVERRATED ஆன ஒரு கருத்து. வெற்றியை அடைந்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்துவிடும் என்று எங்கேயோ இருந்து ஒரு கற்பனை நம்ம மனதுக்குள் வந்து கெட்டியாக ஒட்டிக்கொண்டு பின்னாட்களில் மனிதன் வெற்றியை மட்டுமே தேடிப்போவான். நம்ம வாழ்க்கை ஒரு ECONOMICS நிறைந்த வியாபார அமைப்பு. ஒரு மளிகை கடைக்கு சென்று ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்றுக்கொண்டு இருந்தால் நான் நிறைய வெற்றிகளை அடைந்துள்ளேன் எனக்கு 30 ரூபாய்க்கு 2 கிலோவாக தக்காளியை போட்டுவிடுங்கள் என்று சொன்னால் உங்களுக்கு 2 கிலோ தக்காளி கொடுக்கப்போவதும் இல்லை. அதே நேரம் நான் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை அடைந்துள்ளேன். எனக்கு 1 கிலோ தக்காளி கிடைக்க தகுதி இல்லை , அதனால் 1/2 கிலோ தக்காளி மட்டுமே கொடுங்கள் , நான் 30 ரூபாய் மொத்தமாக கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னால் 1/2 கிலோ உங்களுக்கு குறைத்துமே கொடுக்கப்போவது இல்லை. நீங்கள் பாக்கெட்ல வைத்து இருக்கும் பணம்தான் அடுத்து நீங்கள் என்ன பண்ணவேண்டும் என்று முடிவு பண்ணுகிறதே தவிர்த்து என்னைக்கு இருந்தாலுமே உங்களுடைய வெற்றியும் தோல்வியும் உங்களை அடுத்து என்ன பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணுவது இல்லை. வெற்றி அல்லது தோல்வி என்பது வெறும் இரண்டு வார்த்தைகள். உங்களுக்கான பரிசுகள் இருந்தால்தான் வெற்றியை நீங்கள் துரத்தி செல்கிறீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் ஒரு விஷயத்தை இழந்துவிடுவீர்கள் என்றாலதான் தோல்வியை அடையாமல் இருக்க போராடிக்கொண்டு இருக்கின்றீர்கள். இந்த பிரச்சனையை இப்படித்தான் சமாளிக்க வேண்டும். பணத்தை மட்டுமே கணக்கு இல்லாமல் சம்பாதித்து வைத்துக்கொள்ளுங்கள் ! உங்களுக்கு தோல்வி வந்தாலும் பாதிப்பு இல்லை. வெற்றிகளை அடுத்தவர்களை போல கஷ்டப்படாமல் சுலபமாக வாங்கிவிடலாம் . தோல்வி நிலையானது என்று உங்களை நினைக்கவைப்பது என்ன விஷயம் ? - அது என்ன தெரியுமா ? - கற்பனை !!

No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...