இன்னைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை வணிகம் என்றால் நீங்கள் கண்டிப்பாக ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். வணிகத்தை பொறுத்தவரைக்கும் எப்போதுமே முதலையாகத்தான் இருக்க வேண்டும், யாருக்காகவும் எதுக்காகவும் பாரபட்சம் பார்க்க கூடாது. வணிகம் என்ற துறை அப்படிப்பட்டது. வணிகம் உங்களுடைய கடைசி கட்ட சக்திகளை கூட விலையாக எடுத்துக்கொண்டுவிடும். பதிலுக்கு உங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கொடுக்கும். இந்த இடத்தை உங்களுக்காக தக்கவைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. கம்பெனிக்கள் மற்றும் இன்டஸ்ட்ரிக்களில் நேரத்தை விட்டுக்கொடுக்க முடியாது. உடலுக்கும் மனதுக்கும் கஷ்டம்தான் என்றாலும் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். வாழ்க்கையை டேலியூஷன்ஸ்ஸில் வாழ கூடாது. நிறைய பேக்ரவுண்ட் வொர்க் பண்ண வேண்டும். குறிப்பாக நிறைய விஷயங்களை லார்ஜ் ஸ்கேலில் பண்ண வேண்டும். ஸ்மால் ஸ்கேல்லில் பண்ணிவிட்டு வணிகத்தில் சாதித்துவிட்டேன் என்று சொல்வது எல்லாம் சாதனையே கிடையாது. ஸ்மால் ஸ்கேல் வணிகம் பண்ணுவது உங்களுக்கு அப்போதைக்கு சந்தோஷத்தை கொடுக்கும் ஆனால் கடைசிவரைக்கும் உங்களுக்கு செலவுகளுக்கும் பாதுகாப்புக்கும் பயன்படும் உங்களுக்காக கொடுக்கப்பட்ட வணிக இடத்தை உங்களால் காப்பாற்றிக்கொள்ள முடியாது. ஸ்மால் ஸ்கேல்லில் கிடைக்கும் மொத்த அஸ்ஸெட்ஸ் எல்லாமே லார்ஜ் ஸ்கேல்லில் இருக்கும் ஒரு சின்ன பெர்ஸன்டேஜ்க்கு மட்டும்தான் சமமானதாக இருக்கிறது. வணிகத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பணம் நீங்கள் உயிரை கொடுத்து போராடி சம்பாதித்த பணம். உங்களுடைய பணத்துடைய மதிப்பு எப்போதுமே அதிகமாக இருக்க வேண்டும் ஆனால் நடக்கக்கூடிய அசம்பாவிதங்கள் பணத்துடைய மதிப்பை குறைத்துக்கொண்டே இருப்பது உண்மையில் தர்ம சங்கடமானது. வணிகத்தில் எப்போதுமே மூளை சொல்வதை கேட்க வேண்டும். மனது காட்டும் போக்கில் வணிகத்தில் செல்ல கூடாது. உங்களுக்கு தெரிந்த எல்லா டேட்டாக்களையும் பயன்படுத்தினால்தான் வணிகம் உங்களுக்கு பலன்களை கொடுக்கும். வணிகம் எப்போதுமே நல்லது கேட்டது பார்ப்பது கிடையாது. வணிகம் என்னைக்குமே ஒரு போர் அதனால் கவனமாகத்தான் சண்டைகளை போடவேண்டும்.
No comments:
Post a Comment