புதன், 3 ஜனவரி, 2024

CINEMA TALKS - SINGAM - TAMIL REVIEW - திரை விமர்சனம்

 


காவல் துறை பணியில் சொந்த ஊரில் போஸ்டிங் கிடைத்ததால் எல்லோருடனும் நன்றாக பழகும் ஒரு நேர்மையான SI அதிகாரியாக இருக்கிறார் துரை சிங்கம். ஆனால் சென்னைக்கு பணியிடைமாற்றம் செய்யப்படும்போது அவருடைய வாழ்க்கையில் சென்னையை மையமாக வைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் மயில்வாகனம் என்ற அரசியல் அதிகரமுள்ள ஒரு வில்லனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார் , ஆனால் ACP பதவி உயர்வு பெற்று பின்னாட்களில் துணிந்து அவரோடு மோதி குற்றங்களை தடுத்து எப்படி வெற்றி அடைகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். இந்த படம் கமர்ஷியல் படம்தான் இருந்தாலும் காவல் துறையில் வேலை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இந்த படத்துடைய துரை சிங்கம் என்ற கதாப்பாத்திரம் ரொம்பவுமே இன்ஸ்பிரேஷன்னாக இருக்கிறது. சூரியா , பிரகாஷ் ராஜ் , அனுஷ்கா , விவேக் , நாசர் என்று நிறைய ஸ்டார் வேல்யூவின் பெர்ஃபார்மன்ஸ் இணைந்த நடிப்புத்திறன் இருப்பதால் நிறைய சப்போர்டிங் ஆக்டர்ஸ் என்ற வகையிலும் கூட நிறைய வேல்யூ படத்துக்கு இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இயக்குனர் ஹரி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்துக்கு ஒரு நல்ல நோட்டபிள் அட்வாண்டேஜ். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மற்றும் ஃபேமிலி டிராமாவோடு நம்ம தமிழ் படங்களுக்கு இருக்கும் நிறைய ஃபில்டப் காட்சிகள் படத்தில் இருந்தாலும் இந்த படம் கமர்ஷியல் படமாக அதனுடைய வெற்றியை வெளிவந்த காலகட்டத்தில் பதித்தது என்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது.  இயக்குனர் ஹரி அவர்களிடம் இருந்து கொடுக்கப்படும் ஒரு மாஸ் ஆக்ஷன் ரொமான்ஸ் காமெடி டிராமா என்று எல்லாமே கலந்த ஒரு படமாக இந்த படம் எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்த ஒரு சிறப்பான கமர்ஷியல் படம். 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...