சிங்கம் படத்துக்கு கிடைத்த ஆதரவுக்கு பின்னால் வெளிவந்த ஒரு சூப்பர் ஹிட் மசாலா ஆக்சன் படம் இந்த படம். சென்ற படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் எல்லோருமே இந்த படத்தில் மறுபடியும் அவர்களுடைய பங்களிப்பை கொடுக்க நம்முடைய தமிழ் சினிமாவில் அடுத்த பாகமாக வெளிவந்த ஆக்சன் திரைப்படமான இந்த சிங்கம் 2 - வெளிவந்த நாட்களில் இன்ஸ்டன்ட் பிளாக்பஸ்டர் என்றே சொல்லலாம். புதிதாக சந்தானம் அவர்களின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் ஹன்சிகாவின் கிரஷ் என்று கொஞ்சம் ரொமான்டிக் இருக்கிறது இருந்தாலும் முதல் படத்துக்கு இந்த படம் தெளிவாக இம்ப்ரூவ்மெண்ட் என்றே சொல்ல வேண்டும். விறுவிறுப்பான அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத வேகத்தில் செல்லும் ஸ்கிரீன் பிளே , காவல் துறையின் ஆக்சன் காட்சிகளில் இருக்கும் மாஸ். இது எல்லாமே இன்னொரு லெவல்லில் இருக்கிறது. இந்த படத்தின் கதைக்களம் என்று பார்த்தால் தூத்துக்குடியின் பகுதிகளில் கடத்தல் மற்றும் போதப்பொருள் தடுப்புக்காக இஞ்சார்ஜ் எடுத்துக்கொண்டு அண்டர்கவர் மிஷன்னில் தகவல்களை சேகரித்து சரியான நேரத்தில் ஆக்சன் எடுக்கும்போது ஒரு இன்டர்நேஷனல் கொடூர கொலைகார கிரிமினல்லாக கருதப்படும் டேனியை நேருக்கு நேராக எதிர்த்து எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான். ஆக்சன் அடவென்சர் என்று நம்ம தமிழ் சினிமாவில் இருக்கும் கமர்ஷியல் ஃபார்முலாக்களை மட்டுமே மையப்படுத்தி மக்கள் ரசிக்கும்படியாக கொடுத்து இருக்கும் இந்த ஆக்சன் டிராமாவை போன படத்தை பார்த்த பின்னால் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒரு சிறப்பான இம்ப்ரூவ்மைன்ட் என்ட்ரியாக இருக்கிறது. இந்த படத்தில் கேரக்ட்டர் டெவலப்மைன்ட் கொடுக்க நேரம் இல்லாத அளவுக்கு திரைக்கதை பரபரப்பாக நகர்ந்துகொண்டு இருந்தாலும் படத்துடைய காட்சிகளை அதிகப்படுத்தி கேரக்ட்டர் டெவலப்மைன்ட் நிச்சயமாக கொடுத்து இருக்கின்றார்கள்.சென்ற படத்தை விட நிறைய அட்வென்ச்சர்கள் நிறைய லொகேஷன்ஸ் நிறைய ஆக்ஷன் காட்சிகள் ஒரு சம்பந்தம் இல்லாத ரொமான்டிக் பொர்ஷன் கொஞ்சம் மேலோடிராமா என்று நிறைய விஷயங்களை சேகரித்து ஒரு பிரான்சைஸ் என்ற அடிப்படையில் மிகவும் பிரமாதமான வேர்ஷன் என்று இந்த படத்தை கொடுத்தாலும் இன்டர்நேஷனல் லெவல் ஸ்டாண்டர்ட்ஸ் என்ற வகையில் இன்னும் கண்டிப்பாக வொர்க் பண்ணவேண்டும். குறிப்பாக ஒரு சில சந்தானம் காமெடி பொர்ஷன் படத்துக்கு பொருந்தாத அடிஷன் என்றே சொல்லலாம். சாங்ஸ் மற்றும் பின்னணி இசை என்ற வகையில் தெளிவான பெரிய ஸ்கிரீன் பிளேவுக்கு தரமான பின்னணி இசை மற்றும் வேகமாக சிறப்பாக ஹேன்ட்டல் பண்ணப்பட்ட படத்தொகுப்பு என்று நிறைய பிளஸ் இந்த படத்துக்கு இருக்கிறது இவைகள் மைனஸ்களை மறைத்துவிடுகிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
ARC-G2-030
ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...

-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment