வியாழன், 4 ஜனவரி, 2024

CINEMA TALKS - KALAKALAPPU 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


தொழில் ஆரம்பித்து முன்னேற வேண்டும் என்று இரண்டு தனித்தனி இளைஞர்கள்  வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.  அவர்களுக்கு என்று தனியாக ரொமான்டிக் பொர்ஷன் ஒரு பக்கம் சென்றுகொண்டு இருக்க இன்னொரு பக்கம் ஒரு அரசியல்வாதியின் தவறான வழியில் பண்ணிய காரியங்கள் மற்றும் சேர்த்த சொத்துக்கள் பற்றிய நிறைய ஆவணங்கள் நிறைந்த லேப்டாப் இவர்களுடைய வாழ்க்கையில் இருப்பவர்கள் கைகளுக்கு மாறிவிடுகிறது. இங்கே இந்த இளைஞர்களுக்கு பணம் முக்கியம் என்பதால் என்னென்ன சம்பவங்கள் நடந்தாலும் கடைசிவரை பணத்தை அடைய போரடுவதுதான் இந்த கலகலப்பு படத்தின் கதை. பொழுது போக்கு என்ற வகையில் ஜாலியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் எதிர்பார்ப்பு இல்லாத என்டர்டெயின்மென்ட் வேண்டும் என்று இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். நேரடியாக சென்ற படத்தோடு கதை தொடரவில்லை என்றாலும் சென்ற படத்தில் இருப்பது போலவே காமெடி ஸீன் , ரொமான்டிக் பொர்ஷன், விஷூவல் லெவல் சாங்ஸ் என்று எல்லா விஷயங்களும் படத்தில் இருக்கிறது. பேசிக் ஃபார்முலா உள்ளத்தை அள்ளித்தா ! போன்ற பழைய காலத்து பியூர் காமெடி என்பதால் காட்சி தொகுப்பு மற்றும் வசனங்கள் ஜெனியுன்  காமெடி போகஸ்தான். பாடல் காட்சிகள் விசுவல்லாக சிறப்பு , படத்தொகுப்பு மிகவும் பிரமாதம். விமர்சனங்கள் என்று பார்த்தால் ஸ்டோரி டெல்லின்க் மிக மிக கொஞ்சமாக இருப்பதால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு காமெடி  ஸ்கெட்ச்தான் இந்த கலகலப்பு பிரான்சைஸ் கொடுத்து இருக்கும் அடுத்த கட்ட வெளியீடு. இங்கே என்னதான் இருந்தாலும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்ற வகையில் ஹிப் ஹாப் தமிழா குறைவைக்கவில்லை. மொத்தத்தில் கலகலப்பு 2 - சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் இன்னொரு கலகலப்பான ரொமான்டிக் காமெடி.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !

டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...