இந்த படம் மற்ற படங்களை போல கமேர்ஷியல் சாயம் இல்லாமல் ஒரு ஜெனியூன்னான ஸ்டோரி டெல்லிங் டிராமா ! நரேன் அவருடைய மகளை ரொம்பவுமே கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார், போதுமான சுதந்திரம் கொடுத்து அன்பாக வளர்க்கிறார். இப்போது எதிர்பாராத ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றி ஆட்டோ ஓட்டுனர் செந்தில்லை பள்ளிப்படிப்பு முடியும் முன்னால் காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள் நரேனின் மகள் . அம்மா இல்லாத பெண்ணாக வளர்ந்த ஒரு பெண்ணின் டாக்டர் கனவு கலைந்து போனதோடு மட்டுமே இல்லாமல் ஒரு வருடத்தில் குடும்பமும் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறது. குடிப்பழக்கம் செந்தில் வாழ்க்கையை நாசம் பண்ணவே கிளைமாக்ஸ் ரொம்ப சோகமாக முடிகிறது. கதை அடிப்படையில் இன்னுமே நன்றாக வொர்க் பண்ணி இருக்க வேண்டும். படத்தொகுப்பு அருமை. பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு ஒரு அளவுக்கு நிறைவாக இருந்தாலும் கதை என்ற ஒரு விஷயத்துக்காக மட்டுமே ஃபோகஸ் பண்ணிய இந்த படம் இன்னும் நிறைய விஷயங்களில் ஃபோகஸ் பண்ணிருக்கலாம் ஆனால் இதுதான் இயக்குனர் ஆசைப்பட்ட பெர்ஸ்ப்பெக்டிவ் என்பதால் கதை ரொம்ப ஸ்மார்ட் அண்ட் ஷார்ட்டாக முடிந்துவிடுகிறது. ஒரு டீசண்ட் டிராமா படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் என்று இருக்கலாம். நடிகர்கள் மற்றும் ப்ரொடக்ஷன் குழுவினர் இந்த படத்தில் அவர்களால் பெஸ்ட்டாக கொடுக்க முடிந்த விஷயங்களை கொடுத்து இருக்கிறார்கள் என்பதற்காக வலைப்பூவின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துககொள்கிறோம் !!
No comments:
Post a Comment