Saturday, December 2, 2023

GENERAL TALKS - கனவு ஐடியாலஜி உள்ளவர்கள் - LIFE REVIEW - வாழ்க்கை விமர்சனம் !


இங்கே நாம் எவ்வளவு சிறப்பாக திறன்களை கொண்டவர்களாக இருந்தாலும் ஒரு சில பேரை நம்மால் கடைசி வரைக்கும் சப்போர்ட் பண்ணவே முடியாது. இவர்கள்தான் கனவு ஐடியாலஜி இருப்பவர்கள். நம்ம வாழ்க்கையில் ஒரு சில பேர் இருப்பார்கள். அவர்களை இம்ப்ரஸ் பண்ணி அவர்களுடைய மதிப்பை அடைய வேண்டும் என்று நினைப்போம் ஆனால் கடைசி வரைக்குமே அது நடக்கவே நடக்காது, காரணம் என்னவென்றால் அவர்களுடைய உண்மையான வாழ்க்கைக்கு பொருந்தாத ஒரு கனவு ஐடியாலஜி. இவர்களுடைய கனவு ஐடியாலஜியை பற்றி பார்க்கலாமே. வாழ்க்கையில் எல்லா நேரமும் இவர்களுடைய மனதுக்குள் தன்னை போல சுறுசுறுப்பாக , வேகமாக , ஸ்மார்ட்டாக எல்லோருமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் மேலே வைக்கப்படும் விமர்சனங்களை இவர்களால் கடைசி வரைக்குமே எடுத்துக்கொள்ளவே முடியாது. பொதுவாக தகுதி உள்ளவர்கள் , தகுதி இல்லாதவர்கள் என்று இரு தனித்தனி மக்களாக பிரித்துவிடுவார்கள். தகுதி உள்ளவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே வேத வாக்காக கேட்டுக்கொண்டு வாழ்க்கை மொத்தமுமே பண்ணுவார்கள். இவர்களுடைய மனதை தூரமாக வைத்து இருக்க மாட்டார்கள். தூரத்தை கடந்து நெருங்குவது போல இவர்களை நெருங்கிவிட முடியாது. இவர்களுடைய மனதை மிகவும் உயரமான இடத்தில் வைத்துவிட்டு பின்னால் எல்லோருமே அண்ணாந்து பார்ப்பதை பார்த்து தன்னுடைய மனது மதிப்பும் மரியாதையும் மிக்கது என்று ஒரு முட்டாள்தனமான எண்ணத்தை உருவாக்கிக்கொண்டுவிடுவார்கள். தான் பண்ணுவது தப்பு என்று தெரிந்தும் விதண்டாவாதம் பண்ணிக்கொண்டு தான்தான் கடவுள் என்று தன்னை தானே பிரகடனப்படுத்திக்கொண்டு இருப்பார்கள். மிக மிக முட்டாள்தனமான இவர்கள் மற்றவர்களை எப்போதுமே அன்பாக நடத்த மாட்டார்கள். இவர்களுடைய ஐடியாலஜி ஒரு மட்டமான இஞ்சீனியர் போட்டுக்கொடுத்த கேவலமான பிளான் போல அவ்வளவு சோதப்பலாக இருக்கும். இந்த ஐடியாலஜி மட்டமாக இருக்கிறது என்று இவர்களுக்குமே தெரியும். ஒரு சில இம்ப்ரூவ்மெண்ட் பண்ணினால் இந்த ஐடியாலஜி மற்றவர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்றும் இவர்களுக்கு தெரியும் ஆனால் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இது எப்படி என்றால் இவர்கள் எழுதிய புத்தகத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தும் யாருக்குமே என்னுடைய புத்தகத்தை மாற்றம் பண்ண தகுதி இல்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பதை போன்றதாகும். இவர்களின் கனவு ஐடியாலஜியை கடைசி வரைக்கும் நிறைவேற்றவே முடியாது அப்படியே நிறைவேற்றினாலும் ஒரு மட்டமான முறையில்தான் எக்ஸ்ஸிக்யூட்டாகி நஷ்டத்தை உருவாகும். கனவு ஐடியாலஜி என்று அதனால்தான் சொல்கிறேன். உண்மையான வாழ்க்கையில் எந்த பிரயோஜனமும் இருக்காது இந்த ஐடியாலஜியை நடைமுறைக்கு கொண்டுவரவே முடியாது என்ற அளவுக்குதான் இருக்கும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...