Saturday, December 2, 2023

GENERAL TALKS - APPRECIATION TO THE FICTIONAL WORKS - கதைகளுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு !


ஒரு ஃபிக்ஷன் எழுதுவது அல்லது ஃபிக்ஷன்னை உருவாக்குவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ? இன்னைக்கு தேதிக்கு ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்று சொல்லப்படும் AI கதைகளை எழுதும் அளவுக்கு புத்திசாலியாக மாறிவிட்டது. இந்த உலகம் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தாரைவார்க்கப்பட்டு வருகிறது. கடைசியாக எப்போது மேகஸின்கள் மற்றும் நியூஸ் பேப்பர்கள் காசு கொடுத்து வாங்கி இருக்கிறோம் ! உள்ளூர் கடைகளில் இருபது ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சின்ன சின்ன மேகஸின் தொடர்கதைகளை இப்போது படிக்காமல் இந்த காலத்தில் எல்லாம் இணைய பாட் காஸ்ட்கள் மற்றும் ஆடியோ புத்தகங்களின் கலாச்சாரத்துக்கு மாறிவிட்டோம். இங்கே அச்சுப்பதிப்பகம் வைத்து வார இதழ்களையும் மாத இதழ்களையும் அச்சடிப்பாவர்களின் நிலை என்ன ? சமீபத்தின் வெட்னஸ்டே என்ற நெடுந்தொடரை பார்த்தேன். இமாஜின் பண்ண முடியாத அளவுக்கு இந்த தொலைக்காட்சி நெடுந்தொடரை உலகம் மொத்தமும் அப்படி ஒரு ஆதரவு கொடுத்து வரவேற்பு கொடுத்தது. இதுவே நம்ம ஊர் வார இதழ்களில் ஒரு சிறுகதை அச்சடிப்பு செய்தால் எதனால் இப்படி மிகவும் அதிகமான வரவேற்பை பெறுவது இல்லை. பெரிய நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக மார்க்கேட்டிங் பண்ணிக்கொண்டு அவர்களுடைய ஃபிக்ஷன்களை கலெக்ஷன் அள்ளும் பொக்கிஷங்களாக மாற்றிவிடுகிறார்கள். உயர்தரமான காமிரா , துல்லியமான கம்ப்யூட்டர் எஃபக்ட்ஸ் என்று நிறைய விஷயங்களில் வெற்றி வெற்றியாக குவித்து பல கோடி பணம் முதலீடு போட்டு படங்களியும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களையும் ஆடியோ புத்தகங்களையும் வெளியிடுகின்றன ! இந்த பணத்தின் சாம்ராஜ்யததுக்கு முன்னால் சின்ன சின்ன நிறுவனங்கள் தோற்றுக்கொண்டே இருக்கின்றன என்றபோது தனித்த வேலைக்கு செல்லும் தனிமனிதர்கள் மட்டும் வெற்றியடைய முடியுமா என்ன ? இங்கே தயவு செய்து எழுத்தாளர்களுக்கு மதிப்பு கொடுங்கள் ! இல்லையென்றால் வாழ்க்கை வெறும் உயிரற்ற இயந்திரங்களின் உலகமாகத்தான் எதிர்காலத்தில் மாறியிருக்கும் !!

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...