Saturday, December 2, 2023

GENERAL TALKS - ESCAPIST APPROACH - இதுவும் கவனிக்க வேண்டிய விஷயம் !




நீங்க ஒரு விஷயத்தை உங்களால் செய்ய முடியாது என்று தெரிந்தும் துணிந்து இறங்கி செய்கிற முடிவில் இருக்கிறீர்கள் என்றால் ஒரு நகைச்சுவை காட்சியில் சொல்லுவார்கள் , பாஸ் முன்வெச்ச காலை பின் வைக்க கூடாது ! - அப்போ ஸைட்ல வைக்கலாமாடா ? என்ற வசனம் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா ! படிப்பில் திறமை இருந்தாலும் படித்த வேலையை விட்டுவிட்டு எனக்கு பிடித்த வேலைக்குதான் செல்லுவேன் என்பது நல்ல விஷயமா ? உங்களால் பிடித்த வேலையில் சாதிக்க முடியும் என்றால் நல்ல விஷயம். படித்த படிப்பில் திறமை இல்லை ஆனால் புதிதாக நீங்கள் ஆசைப்படும் வேலையில் உங்களுக்கு திறமைகள் இருக்கிறது என்பது ஒரு நல்ல விஷயம். . இந்த உலகத்துல கொஞ்சம் விஷயங்கள் ரொம்ப ரொம்ப ஆபத்தானது. நிறைய பேர் இலட்சியத்தில் ஜெயிக்க வேண்டும் கனவுகளை அடைய வேண்டும் என்று உங்களுக்கு மோட்டிவேஷன் கொடுப்பார்க்ள். உங்களால் ஜெயிக்க முடிந்தால் உங்களுக்காக நீங்கள் அடுத்த அடுத்த ஸ்டெப் எடுக்கலாம். ஆனால் அதிகமாக காலம் செலவு பண்ணினாலும் உங்களால் ஜெயிக்க முடியவில்லை என்றால் பிரச்சனை இல்லை விட்டுவிடுங்கள். இங்கே இலட்சியத்தை பராக்டிக்கல் பாயிண்ட் ஆஃப் வியூவில் மட்டுமே பார்க்க வேண்டும். என்னுடைய பாயிண்ட் என்னவென்றால் உங்களுடைய லட்சியத்தை அதனை விட பெரிய விஷயம் கிடைக்கிறது என்றால் தாராளமாக விட்டுக்கொடுத்துவிட்டு அடுத்த வேலைகளை பாருங்கள். நிறைய பேர் மனமே மனமே மாறிவிடு , மலையோ பனியோ மோதிவிடு என்று வசனம் பேசிக்கொண்டு இருப்பார்கள். இங்கே இவர்களை நம்பி மோட்டிவேஷன் என்று ஒரு வட்டத்துக்குள் அடைய வேண்டாம் . உங்களால் இங்கே இரயில்வே டிக்கெட் எடுக்க முடியும் என்று தெரிந்தும் பாத யாத்திரை செல்வது போல முட்டாள்தனமான வேலைகளை பார்க்க வேண்டாம். நீங்கள் நம்பலாம். உங்களுடைய உலகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றும் சப்போர்ட் பண்ணுவார்கள் என்றும் நம்பலாம் ஆனால் எல்லோருமே நடிகர்கள். நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒருவர் கூட சப்போர்ட் பண்ண மாட்டார்கள். காலம் என்பதை கவனமாக நீங்கள் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் காலம் உங்களை கவனக்குறைவாக பயன்படுத்தி உங்களுடைய மனதை உடைத்துவிடும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...