வெள்ளி, 1 டிசம்பர், 2023

CINEMA TALKS - SATHURANGA VETTAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

இவ்வளவு துல்லியமாக ஒரு ஹியஸ்ட் பிலிம் நம்ம தமிழ் சினிமாவில் பார்த்தது இல்லை. நாணயம் , சூது கவ்வும் போன்ற படங்கள் ஹியஸ்ட் பிலிம்க்கு ஒரு பேர்ஸ்பெக்டிவ் கொடுக்கிறது என்றால் இந்த படம் இந்த குறிப்பட்ட ஜேனர்ரின் கோர் வரைக்குமே சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துடைய கதாநாயகன் சின்ன வயதில் இருந்தே ரொம்பவே பாதிக்கப்படுகிறார். அவருடைய மானதுக்குள்ளே இந்த வாழ்க்கையில் நிறைய பேரால் ஏமாற்றப்பட்டு நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழக்கும்போது நம்மிடம் அத்தியாவசியமான விஷயங்களை கூட வாங்குவதர்கு காசு இல்லாமல் போகிறது என்று நினைக்கும்போது நம்ம வாழ்க்கையே ரொம்ப கடினமானதாக மாறிவிடும். இந்த படத்தில் கதாநாயகர் இப்படி ஒரு பாதிப்பை அடைந்து அவ்வளவு கஷ்டங்களை பட்டுள்ளார். அதனால் இந்த சமூகத்தின் மீது அதிபயங்கரமான கோபம் உருவாவதால் அவருடைய மொத்த திறனை பயன்படுத்தி நுணுக்கமான மோசடி ஏமாற்று வேலைகளை திட்டமிட்டு செய்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பணத்தை மோசடி பண்ணுகிறார். இப்போது இந்த குற்றங்களில் எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் இருந்ததால் துணிவாக இருக்கும் இவருடைய வாழ்க்கையில் ஒரு நாள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நண்பர்களால் துரோகம் பண்ணப்பட்டு கையில் இருக்கும் காசு எல்லாமே இழந்த பின்னால்லும் குடும்பம் குழந்தைகள் என்று ஆன பின்னாலும் கெட்டவர்களால் பயமுறுத்தப்படும் கதாநாயகர் எப்படி வாழ்க்கையில் பிரச்சனைகளில் இருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை. இந்த படம் ரொம்ப நேர்த்தியாக ரொம்ப சிறப்பாக எடுக்கப்பட்ட படம். நடராஜ் இந்த படம் மொத்தத்தையும் தாங்கி நடித்து உள்ளார். சப்போர்டிங் கேரக்டர்ஸ் எல்லோருமே ரொம்ப பெஸ்ட்டாக பண்ணி இருப்பார்கள். இந்த படம் வெளிவந்த காலத்தில் மோசடி ஏமாற்று வேலைகளுக்கு ஒரு அவார்னஸ் கொடுத்து இருந்ததை கண்டிப்பாக யாராலுமே மறுக்க முடியாது. இந்த படம் கண்டிப்பாக எல்லோருமே பார்க்க வேண்டிய படம். இந்த வலைப்பூவில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக நீங்கள் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், வருடக்கணக்கான உழைப்பால் மட்டும்தான் இந்த வலைப்பூ உருவாகி இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...