Friday, December 1, 2023

CINEMA TALKS - ARUVI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இங்கே எந்த ஒரு க்ரைம் படமும் இவ்வளவு தூரமாக பெண்களுடைய வாழ்க்கையில் அவர்கள் படும் கஷ்டங்களை பிரச்சனைகளை எடுத்து சொல்லுவது இல்லை. அதுவுமே ஒரு பாதிக்கப்பட்ட பொண்ணுடைய பேர்ஸ்ப்பெக்டிவ்வில் இருந்து அந்த பொண்ணு கடந்த காலத்தில் சின்ன சின்ன தப்புகள் பண்ணி இருந்தாலும் செய்யாத ஒரு தப்புக்கு தண்டனை கொடுத்தால் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று இந்த படம் சொல்கிறது. இமாஜின் பண்ணி பாருங்களேன் ஒரு செய்யாத தப்புக்கு பழியை போட்டு நம்மை வீட்டை விட்டு வெளியே அனுப்பி சாப்பாட்டுக்கும் தங்கும் இடத்துக்கும் எந்த வழியும் இல்லாமல் போனால் நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும் . இந்த படத்தில் கதாநாயகி அருவி சந்திக்கும் பிரச்சனைகளை எல்லாம் நம்மால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது அவ்வளவு கஷ்டமான விஷயம். உங்கள் ஃபேமிலியில் மேச்சுரிட்டியாக எல்லோருமே இருந்தால் ஃபேமிலியோடு பார்க்கலாம். இந்த படத்தில் தப்பான காட்சிகள் என்று எதுவுமே இல்லை. வெறும் பேச்சு வார்த்தையில்தான் படும் கஷ்டங்களை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இங்கே மெஜாரிட்டியான மக்கள் தொகை என்ன சொல்கிறது என்பதைத்தான் சப்போர்ட் பண்ணுகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் பேராக இருந்தால் அவர்களுடைய கருத்துக்களை கேட்கக்கூட மறுக்கிறோம், இந்த படம் பற்றி இன்னுமே நிறைய பேசலாம். ஒரு சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சார்ந்த விஷயமாக மட்டுமே இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் கஷ்டங்களையும் அவங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தையும் கொடுக்கும் நீதியின் அமைப்பாக இந்த காலத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. குறிப்பாக இந்த காலத்தில் பழைய பஞ்சாங்கம் பாடாமல் நம்ம தமிழ் சினிமா இது போன்ற விழிப்புணர்வு மற்றும் மனிதத்தன்மைமிக்க மாறுபட்ட படங்களை கொடுக்கிறது என்பது நல்ல மனிதன்மைக்கு நம்பிக்கையாக இருக்கிறது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...