Friday, December 1, 2023

CINEMA TALKS - KULLANARI KOOTAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


ஒரு கதாநாயகனுக்கு வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லை என்றாலும் காதல் வந்தவுடன் காதலியை விட்டு பிரிந்துவிட கூடாது என்பதற்காக வாழ்க்கையில் அதுவரைக்கும் கஷ்டங்களையே பார்க்காத நம்ம ஹீரோ நிறைய கஷ்டங்களை சந்தித்து வாழ்க்கையில் ஜெயித்து காட்டுகிறார் இதுதான் இந்த படத்துடைய கதை. இந்த படம் சக்ஸஸ் ஆக முக்கியமான காரணம் கொஞ்சமாக பட்ஜெட் இருந்தாலும் எல்லோருமே வெளிவந்த காலத்தில் புதுமுகங்களாக இருந்தாலும் படத்தில் ரொம்ப பிரமாதமான நடிப்பு திறனை வெளிப்படுத்தி படத்துடைய கதையை எதார்த்தமாகவும் உயிரோட்டமாகவும் வைத்து இருப்பார்கள், இந்த படம் விஷ்ணு விஷால் , சூரி , அப்புக்குட்டி , மேலும் பல அறிமுக நாயகர்களுக்கு ரொம்ப முக்கியமான கேரியர் ஃபேவரட்டாக இருக்கும் என்று ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாடல்கள் நினைவுக்குள் நிற்கிறது. காமிராவில் கலர் கரேக்ஷன் பண்ணும்பொது படத்துக்கு அதிகமாக கலர் எதுவும் கொடுக்காமல் ஃபைனல் கட் என்றாலும் ஒரு ஆமேச்சுர் ஷார்ட் பிலிம் என்ற லெவல்க்கு வைத்து இருப்பார்கள். எனக்கு இந்த பிலிம் மேக்கிங் ஸ்டைல் பேர்ஸனலாக பிடித்து இருந்தது. கதைக்கு தேவையான விஷயங்கள் மட்டும்தான் படத்தில் இருந்தது. சின்ன சின்ன ஃபேமிலி எமோஷன்ஸ், காவல் துறையில் நடக்கும் சதிகளை கடந்து கதாநாயகரும் நண்பர்களும் வெற்றி அடைய போராடுவது , ஒரு சின்ன ஃபோன் டாக்டைம் பிரச்சனையில் பேச ஆரம்பித்து பின்னாளில் அழகாக ஒரு ரொமான்டிக் கதையாக மாறுவது என்று படத்தில் எல்லா விஷயங்களும் ரொம்ப எதார்த்தமாகவும் ரொம்ப இயல்பாகவும் காட்சியமைக்கப்பட்டு இருப்பது படத்துக்கு ரொம்ப முக்கியமான பிளஸ் பாயிண்ட். இந்த படம் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...