Friday, December 1, 2023

GENERAL TALKS - இன்னைக்கு தேதிக்கு PASSIVE INCOME எவ்வளவு முக்கியமானது ?

 உங்களுக்கு வரக்கூடிய சம்பளத்தில் மொத்தம் 2 வகை இருக்கு . 1. ACTIVE INCOME - அதாவது ஒரு ஆக்டிவ் ஆன வேலையை செய்ய செய்ய ஒரு சம்பளம் உங்களுக்கு கிடைக்கும். இந்த வகை தொகை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஏதாவது நன்றாக பண்ண வேண்டும். 2. PASSIVE INCOME - இந்த தொகை உங்களிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களின் மூலமாகவும் பென்ஷன் தொகை போன்ற செய்த செயல்களுக்காக உங்களுக்கு கிடைக்கும். இன்னைக்கு தேதிக்கு ஆக்டிவ் வருமானத்தில் நிறைய சிக்கல்களை கண்ணாலே பார்க்க முடிகிறது. குறிப்பாக கரோனாவுக்கு பின்னால் யாருக்குமே அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற அளவுக்கு நல்ல வேலை கிடைக்கவே இல்லை. இங்கே நிலைப்பாடு இருக்கும்போது எப்படி நம்மால் ஒரு நிரந்தர வருமானம் நமக்கு வந்துகொண்டு இருப்பதை விட்டுக்கொடுக்க முடியும் என்று யோசித்துவிட்டு மாதம் ஆனால் அந்த 20,000/- என்று சம்பளம் போட்டதும் உடனடியாக வாடகை , உணவு , ரீ- சார்ஜ் , கேபிள் என்று எல்லாமே வரிசையாக பில்லாக வந்துவிடுகிறது. ACTIVE ஆன INCOME கண்டிப்பாக செலவு ஆகிவிடும். குடும்பம் குழந்தைகள் என்று போனால் இன்னுமே அதிகமாக செலவு ஆகிவிடும். இங்கே PASSIVE ஆன INCOME என்று வேலை செய்தாலும் செய்யாமல் போனாலும் உங்களுக்கு ஒரு தொகை மாதாந்திரமாக கிடைத்துவிடும் என்றால் நன்றாகத்தான் இருக்கும் அல்லவா ? நிறைய வெற்றியாளர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் சாதிக்க பேஸிவ் இன்கம் உதவியாக இருக்கிறது. சொத்துக்கள் கரையாமல் இருக்க பேஸிவ்வாக கிடைக்கும் ஒரு சின்ன தொகை கூட அந்த நாளின் செலவுக்கு பிரயோஜனப்பட்டு இருப்பதால் சேமிப்புகளில் கையை வைக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்பது நல்ல விஷயம்தானே ? 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...