Sunday, December 3, 2023

CINEMA TALKS - ABOUT TIME - TAMIL REVIEW - திரை விமர்சனம்.

 இங்கே நிறைய படங்கள் பொழுதுபோக்கு விஷயங்களை மட்டுமே மையப்படுத்தி கொடுக்கப்பட்டாலும் இங்கே நம்ம வாழ்க்கையில் ஒரு சில சிறப்பான படங்கள் மட்டுமேதான் எதார்த்தமான அதே சமயத்தில் ரொம்ப முக்கியமான கருத்துக்களை அவரசரமான நம்ம வாழ்க்கையில நிறுத்தி நிதானமாக புரிய வைக்கும். இப்படிப்பட்ட ஒரு தரமான படம்தான் அபவ்ட் டைம் , டாம்ஹால் கிலீஸன் மற்றும் ரேச்சல் மெக் ஆடம்ஸ் இந்த படத்தில் பிரமாதமான கதாப்பத்திரங்களை நடித்து கொடுத்து இருப்பார்கள். ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆடவருக்கு மட்டுமே தலைமுறை தலைமுறையாக காலத்தில் எந்த ஒரு புள்ளிக்கும் பின்னால் சென்று மறுபடியும் காலத்தை தொடங்கும் சக்தி இருக்கிறது. இந்த சக்தியை வைத்து காதல் , கல்யாணம் என்று வாழ்க்கையில் நிறைய விஷயங்களை வெற்றி அடைந்துவிட்டாலும் குழந்தை என்று வந்த பின்னால் அப்பாவுக்கு கேன்சர் இருப்பதை கதாநாயகர் தெரிந்துகொள்கிறார். இப்போது காலத்தை கடந்தால் கதாநாயகர் பெற்ற குழந்தையை இழக்க வேண்டியது இருக்கும், கடந்து மாற்றவில்லை என்றால் அப்பா இறந்துவிடுவார் இப்படி ஒரு வாழக்கயின் மிகப்பெரிய சிக்கலில் கதாநாயகர் எடுக்கும் முடிவு என்ன ? இந்த காலத்தை கடந்து செல்லும் சக்தி கதாநாயகருக்கு கிடைத்த வரமாக இருக்கிறதா ? இல்லையென்றால் சாபமாக முடிகிறதா ? என்றுதான் இந்த படத்தின் கதைக்களம் கொடுக்கபட்டு உள்ளது. அடிப்படையில் உண்மையில் மிகவும் தரமான படம். கண்டிப்பாக பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய முக்கியமான படம். இந்த படம் உங்களுக்கு கொடுக்கக்கூடிய உணர்வுகள் , மனித வாழ்க்கையுடைய அன்பு மற்றும் எதார்த்தத்தின பரிமாணங்கள் இது எல்லாமே ரொம்ப ஸ்பெஷல்லான் விஷயம் அதனாலதான் இந்த படம் ரொம்ப ஸ்பெஷல்லான படம் என்று சொல்லலாம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...