இசையோடு கலந்த பாடல்கள் காலத்துக்கும் அழியாது. அந்த வகையில் எனக்கு பழைய பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம். சிட்டு குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே. செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே. இந்த பாட்டு மனதுக்கு ரொம்பவுமே ரேஃப்ரஷ் உணர்வு கொடுக்கக்கூடிய பாட்டு. நான் எத்தனை புதிய பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தாலும் இந்த பாடலை கண்டிப்பாக என்னுடைய பிளே லிஸ்ட் பட்டியலில் இடம்பெற வைத்துவிடுவேன். இந்த பாட்டு ஒரு அருமையான ஃ பேமினிஸ்ட் வாய்ஸ் மற்றும் இயற்கையின் வருணனை கருத்துக்கள் நிறைந்த பாட்டு. பொதுவாக அந்த காலத்து பெண்கள் காதல் பாடல்கள் என்றால் காதலனை பற்றிதான் அதிகமாக பாடவேண்டும் என்று யார் சொன்னது ?. தனித்த மனதில் காதலால் எழுந்த உணர்வுகளை பற்றியும் கண்டிப்பாக சுதந்திரமான கருத்துக்களாக பாடவேண்டும் என்று இந்த பாடல் சொல்வதாக எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து இருக்கிறது அது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பாடல் ஸ்பெஷல் , என்னமோ ஒரு வகையில் ஸ்பெஷல். இந்த பாடலில் நிலையான ஒரு விடுதலை உணர்வு இருக்கிறது. அதுவே வாழ்க்கையை மாயாஜலமாக மாற்றுகிறது. ரொம்ப மினிமல்லான பாடல் வரிகள் ஆனால் பாட்டு பிரமாதமாக இருக்கிறது !!
சிட்டுக் குருவி
முத்தம் கொடுத்து சேர்ந்திட
கண்டேனே !!
செவ்வானம்
கடலினிலே கலந்திட கண்டேனே !!
மொட்டு விரிந்த மலரினிலே
வந்து மூழ்கிட கண்டேனே !!
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடா கண்டேனே !! ஹோய்
சிட்டு குருவி
முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே !!
செவ்வானம்
காதலினிலே கலந்திட
கண்டேனே !!
பறந்து செல்ல
நினைத்து விட்டேன்
எனக்கும்
சிறகில்லையே !
பழக வந்தேன் தழுவ வந்தேன்
பறவை துணையில்லையே !
எடுத்து சொல்ல
மனம் இருந்தும் வார்த்தை
வரவில்லையே..! என்னவோ
நினைவிருந்தும் நான்
விடவில்லையே..! ஹோய்..!
சிட்டு குருவி
முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம்
காதலினிலே கலந்திட
கண்டேனே
ஒரு பொழுது
மலராக கொடியில் இருந்தேனா ?
ஒரு தடவை தேன் கொடுத்து
மடியில் விழுந்தேனா ?
இரவினிலே
நிலவினிலே என்னை
மறந்தேனா ?
இளமை
தரும் சுகத்தினிலே
கண்ணம் சிவந்தேனா ? ஹோய்
சிட்டு குருவி
முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே !
செவ்வானம்
கடலினிலே கலந்திட
கண்டேனே !
No comments:
Post a Comment