Tuesday, January 2, 2024

CINEMA TALKS - READY PLAYER ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


நம்ம வாழ்க்கையில் வீடியோகேம்ஸ் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. ஃப்யூச்சர்ரில் உலகம் முழுக்க வீடியோகேம் ஒரு தொழிலாகவே மாறிவிட இந்த வீடியோகேம் உலகத்தை நிறைய விளம்பரங்களை கொடுத்து பெரிய பணமாக மாற்ற உரிமை வைத்து இருக்கும் கம்பெனி திட்டமிடுகிறது. இப்போது ஒரு பிரச்சனை வருகிறது. இந்த வீடியோகேம் உலகம் முழுக்க விளையாடினாலும் இந்த வீடியோகேம்மில் ரகசியமாக ஒரு வெற்றிப்பாதை இருக்கிறது அந்த பாதையில் சென்று சவால்களை வெற்றி அடைந்தவருக்கே இந்த வீடியோகேம் சொந்தம் என்று உயில் எழுதிவிட்டு சென்று இருக்கிறார் வீடியோகேம்மை தயாரித்தவர். வறுமையில் வாழ்ந்துகொண்டு இருந்த நம்முடைய இளைஞர் தெரியாமல் அந்த வெற்றிப்பாதையை கண்டறிந்துகொள்ளவே உடனடியாக கார்ப்பரேட் நிறுவனம் அந்த இளைஞருடைய நிஜவாழ்க்கைக்கு சென்று அவரை காலி பண்ண முயற்சி பண்ணுகிறது. வாழ்வா சாவா என்று நிஜமான வாழ்க்கை போராட்டத்தில் போகவே இப்படிப்பட்ட கனவு வீடியோகேம் விளையாட்டில் வெற்றி அடைந்தாரா ? நிஜ வாழ்க்கையில் கொலைக்காரர்களிடம் இருந்து எப்படி எஸ்கேப் ஆகிறார் ? என்பதே படத்தின் கதை.  உங்களுக்கு டெக்னாலஜி சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் ரொம்பவுமே பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் !! இந்த படம் ரொம்ப இன்னோவேட்டிவ்வான விஷுவல் பிரசன்டேஷன் !! மிஸ் பண்ண வேண்டாம் !!

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...