Tuesday, January 2, 2024

CINEMA TALKS - BIRDBOX - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


பயமுறுத்தும் படங்களை நான் அதிகமாக ரசித்து பார்ப்பது கிடையாது. ஆனால் இந்த படம் நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக எதிர்பார்ப்புகளுக்கு மேலேதான் இருக்கும். இந்த படத்தில் கண்ணுக்கு தெரியாத கோஸ்ட்கள் தெருக்களில் சென்றுக்கொண்டு இருக்கவே தெரியாமல் நேரிலோ அல்லது கேமிராவிலோ அந்த கோஸ்ட்களை பார்த்துவிட்டால் நம்ம மனது அடுத்த நொடி பாதிக்கப்பட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு மேலோகம் சென்றுவிடுவோம். இப்படி ஒரு பயங்கரமான நிலை உலகம் முழுவதுமே சென்றுக்கொண்டு இருக்கும்பொது நமது கதாநாயகி அவளுடைய குடும்பத்தில் கணவரையும் குழந்தைகளையும் எப்படி புத்திசாலித்தனமாக காப்பாற்றி கரை சேர்க்க போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இங்கே என்னுடைய கருத்து என்னவென்றால் பயமுறுத்தும் படங்களுக்கு இது போன்ற கிரேயடிவிட்டிதான் தேவை. பொதுவாக கோஸ்ட் இன் தி டார்க்னேஸ் என்று அரைத்த மாவை அரைக்காமல் கண்களால் பார்த்தால் போதும் சாவு நிச்சயம் என்று பட்டப்பகலில் சவாலான வாழ்க்கையை உலகம் மொத்தமும் வாழவைத்தது இந்த படத்துக்கு மிகவும் சிறப்பான திரைக்கதை வாய்ப்பை கொடுத்து பிரமாதமாக கிளைமாக்ஸ் வரைக்கும் கதையை நகர்த்தக்கூடிய திருப்பமாக மாற்றியுள்ளது என்றால் கண்டிப்பாக மிகையாகாது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஃபேன்டாஸ்டிக். 

No comments:

ARC-G2-030

  ஒரு நாட்டின் மன்னன் நள்ளிரவு நேரத்தில் மாறு வேடத்தில் நகரை சுற்றிப்பார்த்துவிட்டு அரண்மனை திரும்பிக்கொண்டிருந்தான். அரண்மனை அருகே குட்டிப்...