Sunday, December 1, 2024

MUSIC TALKS - UNNIDATHIL ENNAI KODUTHEN - UNNAI ULLAM ENGUM ALLI THELITHEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி

காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது
காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழ் ஆட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்
தடுத்தால் கூட தருவேன்

வெள்ளம் செல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்
இன்பம் இல்லம் கண்டது
இனி ஒரு பிரிவேது
அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே

ஊடல் கொண்ட பெண்மை
அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன்
உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு ? 
என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
காலையில் கனவுகள் எங்கே


No comments:

Post a Comment

STORY TALKS - EP.011 - கஷ்டப்பட்டு வாழ்க்கையில் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் ! [#004]

1. உங்களுடைய சந்தேகத்தை தூக்கி எறிந்தால்தான் நெடு நேரம் ஒரே விஷயத்தில் வேலை பார்த்து வெற்றி அடைய முடியும். உங்களுடைய சாக்கு போக்குகளை தூக்கி...