1. ஒரு மனிதனுக்குள்ளே காதல் இருக்கும்போது மனசு ஒரு போராட்டத்தில் இருக்கும். சரியோ தவறோ எது வேண்டுமென்றாலும் செய்ய தோன்றும் ஆனால் வாழ்க்கை துணையை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. உங்களுடைய வாழ்க்கை துணையை தவறாக தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் இது ஒரு வழி பாதை. கடைசி வரை சிங்கிள்ளாக இருந்தாலும் பரவாயில்லை தவறாக நீங்கள் தேர்ந்தேடுக்க வேண்டாம்.
3. காதலிப்பவர்கள் பணம், நகை, காசு, மேட்டர் என்று எதையும் எதிர்பார்க்காமல் சபலத்துக்கு அடிமை ஆகாத கேஸாக இருந்து காதலித்தால்தான் உண்மையான காதல், இது எல்லாம் இருந்தால் அது கொஞ்சமாக உண்மை தூவப்பட்ட காதல்.
4. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, டைவர்ஸ் டாக்ஸிக் சொந்தக்காரர்களால் நண்பர்களால் நிச்சயிக்கப்படுகிறது.
5. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்து பயந்து செய்யும் காரியங்கள் எல்லாம் கண்டிப்பாக தவறாக போகும், மற்றவர்களை ஜெயிக்க வேலை பாருங்கள், அவர்களை சந்தோஷப்படுத்த வேலை பார்க்க வேண்டாம்.
6. உங்களுடைய வருங்கால தலைமுறையிடம் வெற்றியை எதிர்பார்க்க வேண்டாம் வேல்யூவை எதிர்பாருங்கள், வெற்றி இருந்தால் வேல்யூ கிடைக்காது, வேல்யூ இருப்பவனுக்கு செல்லும் இடமில்லாம் சிறப்பு !
7. உங்களுடைய வாழ்க்கையில் நடக்கவேண்டும் என்ற ஆசைகளை கண்டிப்பாக எழுதி வையுங்கள், இந்த பதிவு உங்களை உங்கள் இலட்சிய பாதையில் அழைத்து செல்ல கண்டிப்பாக உதவியாக இருக்கும்
8. உங்களுடைய உடல் நலம் மோசமாக மாறினாலும் நீங்கள் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சாப்பாட்டுக்காக மனிதன் கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும் என்பதால்தான் சேமிப்புகள் , முதலீடுகள் , எதிர்கால பாதுகாப்பு காப்பீடுகள் முக்கியமாக தேவை !
9. வாழ்க்கையை ரசிப்பவர்கள் வேல்யூக்களை உருவாக்க தவறுகிறார்கள். உங்களுடைய ரசனை உங்களின் பண வரவை அதிகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பயன் இல்லை.
10. இந்த உலகத்தில் காலத்தை தவிர வேறு எந்த விஷயமாக இருந்தாலும் பணத்தால் வாங்கிவிடலாம். கொஞ்சம் அதிகமாகவே பணம் செலவு பண்ண வேண்டியது இருக்கும் இருந்தாலும் கண்டிப்பாக வாங்கிவிடலாம் !
No comments:
Post a Comment