ஒரு தேள் ஒரு தவளையிடம் ஆற்றை கடந்து போக உதவி கேட்டது. தன்னை தவளையின் முதுகில் வைத்து சென்று மறுகரை சேர்த்தால் போதும் என்றும் தனக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் சொல்லியது. சுதாரித்த தவளை தேள் தன்னை கொட்டிவிடும் என்று மறுத்தது ஆனால் தேள் உன்னை கொட்டினால் நானும் ஆற்றில் விழுந்து இறந்துவிடுவேன். எனவே உன்னை கொட்ட மாட்டேன் என்றது. தவளையும் தேள் சொன்ன வார்த்தைகளை நம்பி தன்னுடைய முதுகில் ஏற்றி சென்றது ஆற்றின் பாதி தொலைவு கடந்தபோது தேள் தன்னுடைய விஷயம் நிறைந்த கொடுக்கால் தவளையை கழுத்தில் குத்தி அறுத்தது. எதுக்காக என்னை கொட்டினாய் என்று கேட்கும்போது என்னுடைய கெட்ட குணத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொன்னது. ஆற்று நடுவே மிதந்த ஒரு மரக்கட்டை மேலே தவளை செத்து மிதந்ததும் தேள் தவளையை மரக்கட்டையில் இழுத்து சாப்பிடலாம் என்று திட்டம் போட்டது. ஆனால் நதியின் ஓட்டம் வேகமாக இருந்ததால் தேளும் தவளையும் ஆற்றின் தண்ணீரில் மூழ்கி செத்தது. காரணமே இல்லாமல் கெட்டது பண்ணும் ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள். இவர்களுடைய சாவகாசம் யாராக இருந்தாலும் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். கவனமாக இருங்கள் !
உங்களுடைய வாழ்க்கையில் கெட்ட எண்ணம் என்பது நஞ்சுக்கு சமம் என்றால் அறியாமை என்பது கெட்டுப்போன உணவுக்கு சமம். இவை இரண்டுமே உங்களுக்கு கெடுதல் விளைவிக்க கூடிய காரணிகள். உங்களுடைய வாழ்க்கையில் கெட்ட எண்ணங்களோடு பேசவும் பழகவும் ஆட்கள் இருப்பார்கள். இவர்களுக்கு கொஞ்சமாக அளவோடு நன்மை செய்து ஒரு சின்ன தூரம் விட்டு அருகே நிறுத்துங்கள் ஆனால் நிரந்தரமாக இவர்களை உங்களுடைய வாழ்க்கையில் வைத்து இருக்க வேண்டாம். இவர்களுடைய கெட்ட குணம் உங்களுடைய வாழ்க்கையை கண்டிப்பாக பாதிக்கும். இந்த வகையில் ஒரு குறிப்பிட்ட மக்கள் எக்ஸ்ஸெப்ஷன் - உதாரணத்துக்கு மகான் படத்தில் இடம்பெற்ற காந்தியின் நண்பர்களை சொல்லலாம். தேர்ந்தெடுத்த துறை கொடியது என்றாலும் காந்திக்கு உண்மையாக இருந்தார்கள். இது போன்ற மக்கள் தொழில் அடிப்படையில் பழகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இவர்களுடைய உறவுகளும் தொடர்ந்து வைத்து இருப்பது கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனால் சொல்லப்போனால் யாருமே இந்த உலகத்தில் நல்லவர்கள் இல்லை. இந்த பதிவை எழுதும் என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.
No comments:
Post a Comment