போலி நோட்டுகள் நம்முடைய நாட்டுக்கே பின்னடைவு, இது போல போலி நோட்டுகளால் மக்களின் கஷ்டம் போய்விடும் என்று சொல்வது தவறான செயல். உதாரணத்துக்கு ஒரு ஊருக்கு பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டால் இவ்வாறு ஒதுக்கப்படும் பணம் சும்மா கிடைத்த வரிப்பணம் அல்ல. மாறாக நாம் கஷ்டப்பட்டு விளைவித்த உணவை வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதிப்பதால் உருவாகும் வேல்யூதான் வெளிநாட்டு கரன்ஸியாக நமக்கு வருகிறது. இந்த கரன்ஸியின் ரிசர்வ் எவ்வளவு இருக்கிறது என்று கொடுக்கும் வேல்யூவை பொறுத்துதான் ஒரு போது நல திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் ! ஒரு வகையில் போலி நோட்டும் கணக்கு காட்டப்படாத ஊழலும் நேருக்கு நேராக சந்திக்கிறது !
பெர்ஸ்பெக்டிவ் - 1
பள்ளிக்கூடம் கட்ட 2.5 C நிதி ஒதுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நிதியில் 2.2 C செலவில் பள்ளி கட்டப்பட்ட பின்னால் குடிசைகள் நிறைந்த அந்த கிராமத்தில் படித்தவர்கள் 10 வருடத்தில் நமது நாட்டில் அல்லது வெளிநாடுகளில் நன்றாக சம்பாதிக்கும் இளம் தலைமுறை ஆவார்கள். குடிசைகள் மட்டுமே இருந்த அந்த கிராமத்தை தரமான இல்லங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த கிராமமாக மாற்றுகிறார்கள் ! 5 வருடத்தில் அந்த கிராமம் செல்வ செழிப்பு மிக்க பெரு நகரமாக மாறுகிறது. மருத்துவமனை , சாலைகள் , காம்ப்லெக்ஸ் என்று எல்லாமே இந்த நகரத்தில் இருக்கிறது. இப்போது இந்த நகரத்தின் தொழில்களின் வேல்யூ 1000 கோடியை தாண்டுகிறது.
பெர்ஸ்பெக்டிவ் - 2
நம்ம அரசியல் புள்ளி 2.5 C ல் 2 C பணத்தை பாக்கெட்டில் போட்டு கடைசி வரையில் பள்ளிக்கூடம் கட்டாமல் ப்ராஜக்ட்டை இழுத்தடித்து பின்னால் கனமான மழையால் கட்டிய குட்டி சுவர்களும் இடிந்துவிட்டது என்று ட்ராமா போடவும் படிப்பறிவு இல்லாத பிரிவினையில் இருக்கும் மக்களும் சென்டிமென்டால் மண்டையை ஆட்டிக்கொண்டு இந்த புள்ளியின் தொழிற் பேட்டையில் பசங்களை வேலைக்கு அனுப்பி புள்ளியின் பலத்தை அதிகப்படுத்தி வாழ வைக்கிறார்கள். புள்ளியை படித்தவர் யாரேனும் கேள்வி கேட்டால் இவன் இந்த குலத்தில் பிறந்தவன் இவன் ஒரு முட்டாள் என்று புள்ளி மற்றவர்களின் பார்வைக்கு குற்றம் சுமத்தி வாழ்க்கையை நாசம் செய்கிறார். ஒரு பள்ளிக்கூடமாக மாறவேண்டிய பணம் பின்னாட்களில் சொகுசு பங்களாவாக மாறுகிறது. கெத்து ! மாஸ் ! வேற லெவல் ! இல்லையா ? 15 வருடத்தில் கிராமம் வறுமையில் வாடவும் ஒரு நல்ல ரோடு கூட நல்ல ஆஸ்பத்தரி கூட இந்த கிராமத்துக்கு அமையவே இல்லையே ?
No comments:
Post a Comment