Tuesday, December 17, 2024

STORY TALKS - EP.030 - நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கான போராட்டம் !




இந்த கதை எனக்கு படித்ததில் பிடித்து இருந்தது. ஒரு காலத்தில் ஒரு யுத்தத்தில் தோல்வியுற்ற எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து வெற்றி அடைந்த இராஜாவின் முன்பு நிறுத்தினர். இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். 

உன்னை உயிரோடு விடவேண்டும் அதற்கு “ஒரு நிபந்தனை இருக்கிறது” என்றார் வெற்றி பெற்ற ராஜா. “விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்.” அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கான தூரம் கொண்டு செல்ல வேண்டும். கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் உன் அருகில் வந்துக்கொண்டு இருப்பார்கள். ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் கொண்டு உன்னை குத்திவிடுவார்கள். இந்த சவாலை நீ வெற்றியோடு முடித்துவிட்டால் உனக்கு விடுதலை” என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

இந்த தண்டனைக்கான குறிப்பிட்ட நேரம் வந்தது. இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் வேடிக்கை பார்க்க குழுமியிருந்தனர். போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர். பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது. 

ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்ச்சாகப் படுத்தினர். மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர். இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு கொஞ்சம் தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி ஆணையிட்டு இருப்பதால் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன். இளவரசனை பாராட்டிய பேரரசர் “இளவரசனே! உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம். உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார். “என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை, தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை. எனது கவனமெல்லாம் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று யோசித்து கவனம் செலுத்திய தண்ணீரில் அல்லவா இருந்தது. என்னுடைய கவனம் சிதறாமல் என்னால் இந்த சவாலை வெற்றி அடைய முடிந்ததை என்னால் இப்போதும் நம்பமுடியவில்லை” என்றான்

அரசர் இப்போது விடுதலையோடு கூட ஒரு ஆலோசனை தந்தார். “இளவரசனே! பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள உயிர் வாழும் நாட்களிலே கண்ணும் கருத்துமாக இருந்து கடைசியில் அதை போற்றி பாதுகாக்க வேண்டும். போற்று வோரைக் கண்டுபெருமை கொள்ளாமல் தூற்றுவோரை கண்டு சோர்ந்து போகாமமல் வாழ்வில் கவனம் வைத்து முன்னேற வேண்டும்” என்றார்.

உங்களை பாராட்டுபவர்களை நேசிக்கவும் வேண்டாம். உங்களை காயப்படுத்துபவர்களை வெறுக்கவும் வேண்டாம். உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களில் கவனம் செலுத்துங்கள் அது போதும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...