வெகு தூரத்தில் உள்ள ஒரு கிராமத்து பள்ளத்தாக்கில் சேவை செய்து கொண்டிருந்த இளைய குரு ஒருவர் தனது தலைமையகத்திற்கு மேலும் ஒரு இளைய குரு தேவை என்று தகவல் அனுப்பினார். மேலும் உடனடியாக அவரை இங்கு அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டிருந்தார். தலைமை மடாலயத்தின் மத குரு எல்லா சீடர்களையும் கூப்பிட்டு அனுப்பி இந்த கடிதத்தை படித்து காண்பித்துவிட்டு அவர்களிடம் நான் உங்களில் ஐந்து பேரை அனுப்ப போகிறேன் என்றார்.
ஒரு இளைய குரு, ஆனால் அவர் ஒருவரை தானே அனுப்பச்சொல்லிக் கேட்டிருக்கிறார் ஏன் ஐந்து பேரை அனுப்ப வேண்டும் ? என்று கேட்டார். வயதான தலைமை குரு ஏனென்று உனக்கு பின்னால் தெரியும். நான் ஐந்து பேரை அனுப்பப் போகிறேன், ஆனாலும் ஒருவராவது சென்று சேர்வது நிச்சயமில்லை. ஏனெனில் வழி மிகவும் நீண்டது, மற்றும் ஆயிரத்தோரு தடைகள் வரும். என்று கூறினார்.
எல்லோரும் சிரித்தனர். இந்த வயதான மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டது. ஒரே ஒருவர் தேவைபடும் இடத்திற்கு ஏன் ஐந்து பேரை அனுப்பவேண்டும் என்று கேட்டனர். ஆயினும் அவர் வற்புறுத்தியதால் ஐவர் பயணத்திற்கு தயாராயினர்.
அடுத்த நாள் காலை அவர்கள் ஒரு கிராமத்தை கடக்கும்போது ஒரு அறிவிப்பாளன் அந்த கிராமத்தின் தலைமையிடம் இருந்து செய்தி கொண்டு வந்தான். எங்களது குரு இறந்துவிட்டார். எனவே எங்களுக்கு ஒரு குரு தேவை. நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான்.
அந்த கிராமம் நல்ல செழிப்பானதாகவும் வளமானதாகவும் தோன்றியது. அதனால் அந்த ஐந்து பேரில் ஒருவர் நான் இங்கேயே தங்க விரும்புகிறேன். ஏனெனில் இதுவும் சேவைதான். ஏன் பள்ளத்தாக்கு வரை செல்ல வேண்டும் ?. இங்கேயும் நான் அதே வேலையைதான் செய்யப் போகிறேன். நீங்கள் நால்வரும் போங்கள் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்றார். ஒருவர் குறைந்துவிட்டார்.
அடுத்தநாள் அவர்கள் ஒரு நகரத்தின் வெளிப்பாதைவழியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நகரத்தின் அரசன் அந்த வழியே தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். அந்த நான்கு பேரில் ஒரு துறவி மிகவும் ஆரோக்கிய மானவராகவும் தேஜஸ் பொருந்தியவராகவும் அழகானவராகவும் இருந்தார்.
உடனே அரசன் நில்லுங்கள். நான் என் பெண்ணிற்கு ஒரு இளைஞனை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் மிகப் பொருத்தமானவராக தோன்றுகிறீர்கள். எனக்கு ஒரே ஒரு மகள்தான். அவளை திருமணம் செய்து கொண்டு இந்த அரசையும் ஏற்றுக் கொள்ளுங்கள். என்றான். இயல்பாகவே அந்த இளம் துறவி தனது சக பயணிகளிடம்போய்வருகிறேன் என்று கூறி விடைபெற்றுக் கொண்டான். அவனும் போய்விட்டான். இரண்டாவது ஆளும் சென்று விட்டான்.
இப்போது இருந்த மூன்று பேருக்கும் அந்த வயதான குரு அறிவு கெட்டவர் அல்ல என்பது புரிந்தது. நன்றாக யோசித்தே இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் என்றும் புரிந்ததுன். இருப்பினும் இன்னும் தூரமாக செல்ல வேண்டிய இந்த வழி மிகவும் நீண்டது.
மேலும் ஆயிரத்தோரு தடைகள் தங்களுக்காக காத்திருக்கிறது என்பதும் புரிந்தது. இப்போது மூவரும் நாம் இதுபோன்ற ஒரு போதும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டனர். ஒருவர் அரசராகவும் மற்றொருவர் மிகப் பெரிய குருவாகவும் ஆனதில் அடிமனதில் பொறாமை இருந்தது. என்னதான் நடக்கப் போகிறது இந்த பள்ளத்தாக்கில் என்று எண்ணினர்.
மூன்றாவது நாள் அவர்கள் வழியை தவற விட்டுவிட்டனர். தூரத்தில் மலை உச்சியில் ஒரே ஒரு விளக்கு வெளிச்சம் தெரிந்தது. எப்படியோ தட்டு தடுமாறி அந்த விளக்கு வெளிச்சத்தை அடைந்தனர். அது ஒரு வீடு. அங்கே ஒரே ஒரு இளம் பெண் இருந்தாள். அவள் இவர்களை பார்த்தவுடன் நீங்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் போலத் தெரிகிறீர்கள்.
எனது தாயும் தந்தையும் வெளியே சென்றவர்கள் இந்நேரம் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை. எனக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது. தெய்வம் அனுப்பிய தூதுவர்கள் போல நீங்கள் வந்து விட்டீர்கள். மிகவும் நன்றி. விதி உங்களை அனுப்பி இருக்க வேண்டும். எனது தாய்தந்தை வரும்வரை நீங்கள் என்னுடன் இருங்கள் எனக்கு பயமாக இருக்கிறது என்று கேட்டுக் கொண்டாள்.
அடுத்த நாள் காலை இவர்கள் கிளம்ப வேண்டும். ஆனால் இவர்களில் ஒருவர் பேசி பேசி ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் ஆழமாக காதலில் விழுந்து விடவே இவளுடைய பெற்றோர் வரும்வரை இவளை நான் பாதுகாக்க வேண்டும் என்றும் நான் வர முடியாது. அது முறையல்ல என்றும் கூறி வர மறுத்தார். மற்ற இருவரும் இது சரியல்ல.
இந்த பாதையில் நாம் சென்றடையப் போகிறோம். நீ வரவில்லை என்று சொல்கிறாயே ?. மேலும் நாம் இதுபோல செய்வதில்லை என்று அல்லவா நாம் முடிவு செய்தோம் அல்லவா என்று கேட்டனர். அதற்கு அவன், நான் வாழ்க்கை முழுவதும் கருணையைப் பற்றியே கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன்.
இந்த பெண் தனியாக இருக்கிறாள். இவளது பெற்றோர் இன்னும் வரவில்லை. இப்படி விட்டுவிட்டு போவது நல்லதல்ல. இது கெடுதலாகலாம். கடவுள் என்னை மன்னிக்கவே மாட்டார். நீங்கள் போகலாம். நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்றான். உண்மையில் அவன் இவர்கள் சென்றுவிட வேண்டும் என விரும்பினான். மூன்றாவது நபரும் விடுபட்டு விட்டார்.
No comments:
Post a Comment