Sunday, December 22, 2024

STORY TALKS - EP.051 - இன்வேஸ்ட் பண்ணும் முன்னால் யோசியுங்கள் !



ஒரு ஊரில் மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அதற்கு மீன் பிடிப்பவன் தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். “அது எப்படி செயல் படுகிறது?” என்று கேட்டான். “சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.!” என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான். இப்போது மீனவன் சொன்னான்,” நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.” வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான், “இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. இப்படி தான் நீ மீன் பிடிப்பாயா? அது சரி, இன்று இந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்?” மீனவன் சொன்னான். “இன்று நீ ஆறாவது!!”இப்படித்தான் நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி?” ” கோடீஸ்வரர் ஆவது எப்படி?”” சிறப்பாக தொழில் செய்வது எப்படி? என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர். இந்த மாதிரியான மோட்டிவேஷன் புத்தகங்கள் நகைச்சுவை காட்சியில் வருவது போல எப்படி பணக்காரனாக ஆவது என்ற தேடலுக்கு ஒரு சுமாரான பதிலைத்தான் கொடுக்கிறது. ஒரு நாளின் 24 மணி நேரத்தை கணக்கு போடுங்கள். இந்த 24 மணி நேரத்தில் நீங்கள் செய்த விஷயம்தான் உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்கள் கொடுத்த ஒரு அப்டேட். இது போன்று அப்டேட்களை சரிவர செய்யாமல் வாழ்க்கை அப்படியே இருக்கவேண்டும் என்றால் காலத்தால் நீங்கள் கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவீர்கள். ஒரு விஷயத்தை விலை கொடுத்து வாங்கும் முன்னால் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இதுக்கு ஒரு பெரிய உதாரணம் எனது-வி4-விளம்பரங்கள் நிறுவனம்தான். மொத்தமாக இடை தரகர்களின் சதிகளால் நாசமாக போனது ஏமாந்து போன முதலீட்டாளர்கள்தானே ! எனவே கவனமாக இருங்கள். இந்த ஜெனெரேஷனில் ஒரு ஒரு வருடமும் இரு மடங்கு தன்னை மேம்படுத்திக்கொள்ளும் மக்களே வெற்றிகளை அடைகிறார்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...