Wednesday, December 18, 2024

STORY TALKS - EP.039 - கெடுக்கும் புத்தி உள்ளவர்கள் சாவகாசம் ஆபத்து !




ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது. அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான். இப்போது வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ”அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்?" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது. அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது. என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது. உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது. உடனே இரண்டாவது நரி ”ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது. உடனே இது ”அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. என்னை சந்தோஷ உலகத்துக்கு அனுப்ப போறாரு தெரியுமா ? இனிமே நான் காட்டுல கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை தெரியுமா ?" ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது. இரண்டாவது நரி ”அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, ”உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார். உன்னுடைய ஆசை எல்லாமே நிறைவேற்றுவாரு , இருந்தாலும் அதுக்கு ஒரு நிபந்தனை இருக்கு” என்றது. ”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது. உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்.
ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது. ஆனால் முதல் நரி அமைதியாக ”இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது. இந்த மாதிரி ஆட்களை மட்டுமே நம்பவே கூடாது. தான் கெட்டது போதும் என்று இல்லாமல் அடுத்தவர்களையும் சேர்த்து கெடுத்து மற்றவர்களால் அருவருக்கத்தக்க ஒரு சோக நிலைக்கு கொண்டுபோய்விட்டு இவர்கள் மட்டும் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களை நம்பினால் கண்டிப்பாக முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டு கேசுவலாக சிரிப்பார்கள். இவர்களை கண்டிப்பாக தூரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கேவலமான புத்தி இருப்பவர்கள் சொல்லும் பேச்சு கேட்டால் வாழ்க்கை நாசமாக போய்விடும். 


1 comment:

Anonymous said...

https://www.msn.com/en-in/money/news/invested-rs-8-lakh-return-0-woman-quits-youtube-after-three-years-deletes-all-250-videos/ar-AA1w9Lm6?ocid=msedgntp&pc=DCTS&cvid=57d98a384d0e4e6eac23954efb03b5f1&ei=16

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...