கிறிஸ்துமஸ் படங்கள் வரிசையில் ஒரு ரசிக்கும்படியான காமெடி டிராமா படமாக வெளிவந்து வெற்றி அடைந்த படம் இந்த டியர் ஸான்டா ! ஒரு பையன் அவனுடைய கிறிஸ்துமஸ் நாட்களுக்கு அவனுடைய அம்மாவும் அப்பாவும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதால் ஒரு லெட்டர் எழுதி தன்னுடைய வாழ்க்கையின் கஷ்டங்களை போக்க சான்டா கிளாஸிடம் உதவி கேட்கவே ஸ்பெல்லின்க் மிஸ்டேக்கால் இந்த லெட்டர் சாத்தானுக்கான பெயர் எழுதப்பட்டு பாதாள உலகம் செல்லவே அங்கே இருக்கும் சாத்தான் இந்த பையனுக்கு உதவி பண்ணுகிறேன் என்ற காரணத்தை வைத்து மொத்தமாக மூன்று வரங்களை கேட்க கட்டாயப்படுத்துவதால் நடக்கும் கலகலப்பான சம்பவங்களோடு ஒரு நல்ல கதை அம்சம் கொண்ட எமொஷனல் டிராமாவாக இருக்கிறது.
ஜாக் பிளாக் அவருடைய ட்ரேட்மார்க் நகைச்சுவையால் பிரகாசிக்கிரார். புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் கதாப்பாத்திரத்தை நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சம் லாஜிக் மீறல்கள் கண்களுக்கு ஆங்காங்கே தென்பட்டாலும் மொத்தமாக படம் ஒரு தெளிவான கதையாக கொடுக்கப்பட்டு உள்ளது. கிளைமாக்ஸ்ஸில் ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து கதையை நன்றாகவே முடித்து இருக்கின்றார்கள். ஜெனரல் ஆடியன்ஸ்க்காக எடுக்கப்பட்ட ஒரு ஃபெஸ்டிவல் ஃபேமிலி காமெடி டிராமா என்று இந்த படத்தை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம். இந்த படம் OTT தளங்களில் இருக்கிறது. கண்டிப்பாக ஒருமுறை பாருங்கள். இந்த விமர்ஸனம் போல இன்னும் நிறைய விமர்சனங்களை தெரிந்துகொள்ள இந்த வலைப்பூவின் சந்தாதாரர் ஆக மாறிவிடுங்கள்.
No comments:
Post a Comment