அதிகமாக பணம் வைத்து இருப்பவர்களிடம் இருந்து கொள்ளையடிப்பதையும் சிறுசிறு திருட்டுகளையும் செய்யக்கூடிய வேலை தேடும் சராசரி இளைஞர்கள் ஒரு கட்டத்தில் ஒரு காலத்தில் ஒரு பணக்கார அரசியல்வாதியால் பாதிக்கப்பட்ட கதாநாயகியின் அப்பாவின் கதையை தெரிந்துகொள்கிறார்கள்.
மக்களுக்கு நன்மை செய்ய முயற்சி செய்து ஒரு அரசியல்வாதியின் சுயநல சூழ்ச்சியால் இன்வெஸ்ட் பண்ணிய மொத்த மக்கள் பணத்தையும் இழந்து ஒரு காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவருக்காக கண்டிப்பாக அந்த அரசியல்வாதியை எதிர்த்து ஜெயிக்க வேண்டும் என்று ஒரு பெரிய மனிதரை சொசைட்டியில் அரசியல் புள்ளியாக இருக்க கூடிய ஒரு நபரை நன்றாக பணம் வைத்திருக்கக் கூடியவரை நேருக்கு நேராக எதிர்த்து போராட நினைக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.
இருந்தாலும் இவர்களின் நுணுக்கமான திட்டம்தான் இந்த படத்தின் கதைக்களம் வாழ்க்கையில் பழி வாங்குவதற்கு காரணமாக அமைவது ஏதுவாக இருந்தாலும் புத்திக்கூர்மை இருக்க வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது
இந்த படம் தெளிவான கதையாக இருப்பதால் இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய லெவல் ஹியஸ்ட் படம் என்று இல்லாமல் திரைக்கதையை புரிந்துகொள்ள நன்றாக வசதியாக இருக்கிறது. வசனங்களும் காட்சியமைப்பும் பிரமாதமாக இருந்தாலும் இந்த படத்தை தூக்கி நிறுத்தி இருப்பது கண்டிப்பாக நல்ல நடிப்புதான் என்று சொல்லலாம்.
இந்த படத்தில் நடிப்பவர்கள் அத்தகைய கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளார்கள் இந்த படம் ஒரு சின்ன ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய சப்போர்ட் தேவைப்படுகிறது, காரணம் என்னவென்றால் சதுரங்க வேட்டை படத்துக்கு கொடுத்த அளவுக்கு ப்ராஜக்ட் பட்ஜெட் இல்லை என்றாலும் ஒரு தெளிவான கேஸ்டு ஃபிலிம் இது மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது கஷ்டம். இந்தப் படத்துக்கு நிச்சயமாக நிறைய ஆதரவு கிடைத்திருக்க வேண்டும் இருந்தாலும் இந்த படத்துக்குப் பின்னால் நிறைய படங்கள் இதுபோன்ற சேனலில் இன்று வரையில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment