Saturday, December 21, 2024

STORY TALKS - EP.047 - வெறுப்பால் வெட்டியாக போக வேண்டாம் !




முன் ஒரு காலத்தில் ஒரு நாடு மக்கள் பிரிவால் பிளவுபட்டிருந்த போது அதன் தலைநகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பகுதியை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பகுதி பக்கம் கொட்டினார்கள். (அவ்வளவு குரோதம்!) மேற்கு பகுதியை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பகுதி பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள். மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள்: "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" (“EACH GIVES WHAT HE HAS") எவ்வளவு நிதர்சனமான உண்மை…! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும். உங்களுக்கு “உள்ளே” என்ன இருக்கிறது? அன்பா - பகையா? அமைதியா - வன்முறையா? வாழ்வா - சாவா? உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா? இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன? "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" - இப்போது நடப்பு பிரச்சனைக்கு வருவோம் , பக்கத்து ஸ்டேட்டில் இருந்து மருத்துவ குப்பைகள் கொட்டப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாங்களும் குப்பைகளை கொட்டுவோம் என்று ஒரு கட்சி உறுப்பினர் சொல்கிறார் என்றால் எவ்வளவு யோசனை இல்லாத விஷயம் என்று பாருங்களேன் ! தனி மனிதன் வளர்ச்சி அடைய முடியாது. ஒரு மனிதன் வளர்ச்சி அடைய அவனுக்கு ஒரு சமூகம் தேவை, வெறுப்பு அரசியல் வெறுப்பை காட்டும்போது ஜிவ்வென்று போதையேற்றலாம் ஆனால் கடைசியில் உங்களை கேவலமான நோய்வாய்ப்பட்ட பேஷண்ட்டாக மாற்றிவிடும். மக்கள் எப்போதுமே சுய மரியாதையை காப்பாற்ற அறிவு கூர்மையை பயன்படுத்துங்கள். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியல் எனும் சாக்கடையை பயன்படுத்த வேண்டாம். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...